நம்பிக்கை மேற்கோள்கள்

"நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அதுதான் வாழ்வின் ரகசியம். நான் அனாதை விடுதியில் இருந்த போதும், உணவுக்காக தெருக்களில் சுற்றித் திரிந்த போதும், என்னை நான் உலகின் மிகச் சிறந்த நடிகனாகவே எண்ணிக் கொள்வேன்" – சார்லி சாப்ளின்

*****

"திறமை, தைரியம் மற்றும் உழைப்பு இவைகளின் கூட்டுச்சேர்க்கையின் மூலமாக நிகழ்வதே அதிசயங்கள்" – பாப் ரிச்சர்ட்ஸ், ஒலிம்பிக் சாம்பியன்

*****

"நேற்றைய தோல்விகளே இன்றைய விதைகள். அவ்விதைகளை சரியான முறையில் பயிர் செய்வதன் மூலம் நாளைய வெற்றியை சிறந்த முறையில் அறுவடை செய்ய முடியும்" – பீடஜாப்ரா

*****

"மிகவும் எளிய முறையில் அமைதியான மனநிலையைப் பெற முடியும். எதற்காகவும் கவலைப்படாதீர்கள். அனைத்திற்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்" – பெயர் தெரியாத ஓர் அறிஞர்

*****

"நீங்கள் உங்கள் மூதாதையர்கள் மற்றும் சக மனிதர்களைக் காட்டிலும் சிறப்பாகத் திகழ்வதை விட, உங்களை விட நீங்கள் சிறப்பாகத் திகழ முயற்சி செய்யுங்கள்" – வில்லியம் பால்க்னர்

*****

"நான் இன்று முழுமையாக சாதித்தவைகளைக் கண்டு ஆரம்ப நாட்களில் மரண பயம் கொண்டிருக்கிறேன்" – பெட்டி பென்டர்

*****

"நீங்கள் வெற்றி என்ற ஓர் இலக்கை அடைய பல முறை போராட வேண்டியிருக்கலாம்" – மார்க்ரெட் தாட்சர்

*****

"நன்மைகளைத் தேடுங்கள். அது உங்கள் சுற்றுப்புறத்தில் தான் உள்ளது. தேடுங்கள், கண்டறிந்த பின் அதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். பிறகு நீங்களே அதில் நம்பிக்கை கொள்வீர்கள்" – ஜெ ஓவென்ஸ்

*****

"உற்சாகம் இருந்தால் எதையும் சாதிக்க முடியும். உற்சாகம் என்பது வானளாவிய எண்ணங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை" – ஹென்ரி போர்டு

*****

About The Author

4 Comments

 1. chitra devi

  வெர்ய் ச்நேட் கோட் இன்fஒர்மடிஒன் fஒர் யொஉத்
  தன்க் உ fஒர் இட்

 2. vaanambadi

  நன்றி மிகவும் பயனுள்ள செய்தி! மறக்கமாட்டேன்

 3. Sai priya

  ஏன் டா இப்படி மொக்க பொடுரிங்க ?

Comments are closed.