நாக்கு

நாவில் இரண்டு வகை ஒன்று நா (நாக்கு) மற்றொன்று பேனா. இரண்டுக்கும் முக்கியத்துவம் எப்போதும் உண்டு; நாவினாலும் பேனாவினாலும் உயர்ந்த இடத்திற்குச் சென்றவர்கள் பலருண்டு. பேச்சில் நாக்கு முக்கிய இடத்தை வகிக்கிறது. இனிமையைக் கொடுக்க வல்லது. பலரைக் கவரும் தன்மையுடையது.

‘பல் போனால் சொல் போகும்’ என்பது முதுமொழி. நாக்குமட்டும் இல்லை என்றால் பேச்சுக்கே இடமில்லை. குழந்தை பிறந்ததும் மழலைச்சொல் எப்போது கேட்கும் என்று ஏங்குபவர் யார்தான் இல்லை.

நாக்கினால் சாப்பிடும் பதார்தத்தைச் சுவைத்து சாப்பிடுவர் அடையும் இன்பம் சொல்லிடமுடியாது. ஐந்தறிவு கொண்ட எல்லா விலங்கினங்களும் நாக்கினால்தான் எல்லாவற்றையும் செய்கின்றன. குட்டி பிறந்ததும் அருவருப்பின்றித் தன் நாக்கினால் தன்குட்டியைத் தானே சுத்தம் செய்கின்றன. நாக்கினால் தடவிக்கொடுத்துத் தன் அன்பையும் ஆதரவையும் தெரிவிக்கின்றன.

‘…ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்று நாவின் வலிமையைத் திருக்குறள் பறைசாற்றுகின்றது.

‘நாவால் பிறரை சுடாதே’ என்று அவ்வை மூதாட்டியும் நமக்குக் கூறியுள்ளார்.

தவறாகப் பேசினால் ‘நாக்கு நீளம்’ என்றும் நாக்கை வெட்டிவிடுவேன் என்பர் சிலர். ‘நாவை அடக்கு இல்லையேல் நடப்பதே வேறு’ என்பர் சிலர். நன்றாகப் பேசினால் நன்நாக்கு. இல்லையெனில் போடா புண்ணாக்கு என்போரும் உண்டு. நாவின் சாதுர்யத்தால் பலர் இவ்வுலகையே வெல்கின்றனர்.

நாவால் இசையும் பாடுகின்றனர். வசையும் பாடுகின்றனர். சிலர் புறமும் பேசுகின்றனர். பேச்சாற்றல் மிக்கவர் பல மணிநேரம் பேசினாலும் அலுப்பதில்லை. சிலர் பேச ஆரம்பித்தலோ எப்போது முடிப்பர் என்றாகிவிடும். அதைத் தெரிந்தேதான் நம் உடம்பில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேல் உறுப்புக்களைப் படைத்த இறைவன் நாக்கை மட்டும் ஒன்றாகப் படைத்துவிட்டான் போலும்.

நாக்கினால் நன்மை தீமை உண்டு. தேவை நாவடக்கம். தேவையான நேரத்தில் பேசாமல் இருப்பதும் தேவையற்ற நேரத்தில் பேசுவதும் வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டியிருக்கும்.

ஓரு வேடிக்கைக் கதையொன்று உண்டு. பல் சொல்லிற்றாம் நாக்கைப் பார்த்து. நாங்கள் முப்பத்திரண்டு பேர்.. நீ மட்டும் ஒழுங்காய் இல்லையென்றால் கடித்து விடுவோம் என்று மிரட்டியதாம். அதற்கு நாக்கு சொல்லிற்றாம். நீங்கள் எத்தனை பேர் இருந்தாலும் கவலையில்லை. நான் மட்டும் சற்று மாற்றி ஒரு வார்த்தையை சொன்னால் போதும் என் வார்த்தையைக் கேட்டதுமே உங்கள் முப்பத்திரண்டு பற்களையும் உடைத்து விடுவர் ஜாக்கிரதை என்று அமைதியாக சொல்லிற்றாம். நாக்கை நீங்கள் கடித்துக் கொள்வதைப் பார்க்கின்றேன்.

போதும் என்று சொல்லுமுன் நாக்கின் பெருமையை இத்துடன் முடித்து விடுகிறேன்!

About The Author

14 Comments

 1. Srinivasan K

  அந்த கடைசி வேடிக்கை கதை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது

 2. pa srinivasan

  அந்த கடைசி வேடிக்கை கதை மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது

 3. subha

  னாக்கு பல்ல பாத்து சொல்ரதும், பல் நாக்க பாத்து கன்டிகிரதும் நல்ல இருக்கு சார்

 4. chandrasekaran

  உங்கல் பனி தொடரட்டும் வாழ்த்துகல்

 5. chandrasekaran

  உங்கல் பனி தொடரட்டும் வாழ்த்துகல்

 6. chitra

  அருமையாக உள்ளது சிரித்து சிந்திக்க மட்டும் அல்ல நாவடக்கம் இல்லை என்றால் என்ன ஆகும்?? இதோ கீழே படியுஙள்

  பல் சொல்லிற்றாம் நாக்கைப் பார்த்து. நாங்கள் முப்பத்திரண்டு பேர்.. நீ மட்டும் ஒழுங்காய் இல்லையென்றால் கடித்து விடுவோம் என்று மிரட்டியதாம். அதற்கு நாக்கு சொல்லிற்றாம். நீங்கள் எத்தனை பேர் இருந்தாலும் கவலையில்லை. நான் மட்டும் சற்று மாற்றி ஒரு வார்த்தையை சொன்னால் போதும் என் வார்த்தையைக் கேட்டதுமே உங்கள் முப்பத்திரண்டு பற்களையும் உடைத்து விடுவர் ஜாக்கிரதை என்று அமைதியாக சொல்லிற்றாம். நாக்கை நீங்கள் கடித்துக் கொள்வதைப் பார்க்கின்றேன்.””

Comments are closed.