நிம்மதியாக வாழ்வதற்கான சில வழிமுறைகள்

எந்த ஒரு பொருளையும் உருவாக்கிட சில வழிமுறைகள் உண்டு. உதாரணமாக, ஓரு திரைப்படத்தை உருவாக்க வேண்டுமெனில் அதற்கான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திட சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென்று சொல்கிறார் டான்யல் ஹோலிஸ்டர். அது என்னவென்று பார்ப்போமே!

* மற்றவர்கள் எதிர்பார்ப்பதைவிட நிறைவாகவும், அன்புடனும் செய்திடுங்கள்.
* நீங்கள் எழுதிய முதல் கவிதையை பாதுகாத்திடுங்கள்.
* மற்றவர்களுக்காக வாழ்ந்திடாமல் உங்களுக்காக வாழ்ந்திடுங்கள்.
* மற்றவர்களிடம் உண்மையான அன்புடன் பழகிடுங்கள்.
* உண்மையான அன்பில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
* அடுத்தவர்களின் கனவுகளை கேலி செய்யாதீர்கள்.
* அன்பு பல நேரங்களில் வருத்தமளித்தாலும், அன்பில்லாமல் வாழ முடியாது.
* நியாயத்திற்காக போராடுங்கள்.
* வேகமாக சிந்தித்திடுங்கள். ஆனால் நிதானமாக பேசிடுங்கள்.
* சாதனைகள் புரிவதற்கு முன்பு தடைகள் பல ஏற்படுவது இயல்பு.
* பெற்றோர்களுடன் தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள்.
* உறவுகளை மிகவும் கவனத்துடன் கையாளுங்கள்.
* உங்களுடைய தவறுகளுக்காக வருந்துங்கள்; உணர்ந்து திருந்திடுங்கள்.
* நீங்கள் விரும்புகிறவர்களை மணப்பதைவிட உங்களை விரும்புகிறவரை மணந்திடுங்கள்.
* உங்களுக்கென தினமும் சிறிது நேரம் செலவிடுங்கள்.
* எக்காரணத்திற்காகவும் உங்களுடைய சுயமரியாதையை இழக்காதீர்கள்.
* சில கேள்விகளுக்கு மவுனமே சிறந்த பதில்.
* நிறைய புத்தகங்களை வாசித்திடுங்கள்.
* அன்பான சூழ்நிலையில் வாழ்ந்திடுங்கள்.
* கடந்த கால வாழ்க்கையை மறந்து நிகழ்காலத்தில் வாழப் பழகுங்கள்.
* எந்த ஓரு சூழ்நிலையிலும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுங்கள்.
* உங்கள் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ்ந்திடுங்கள்
* பண்புடன் வாழுங்கள்.
* துயரமான நாள்களில் கடவுளை நம்புங்கள். அவரால் மாற்ற முடியாதது எதுவுமில்லை.

About The Author

13 Comments

 1. prema

  மிகவும் கவலையான நேரம்தனில் படிக்கவேண்டிய தன்னம்பிக்கை வாக்கியகள்

 2. S.THEERTHAGIRI

  வாழ்கைக்கு உதவும் வழிமுறைகள் Excellent

 3. thasleema

  ரொம்ப நல்ல அரிவுரை
  சிந்திக்க வைக்கிரது

 4. ஆ.ரவிச்சந்திரன்,

  ஜே.கிருஷ்ணமூர்த்தி நூல்களை படியுங்கள்,நல்ல வழிகாட்டியாக அமையும்,

Comments are closed.