நிறங்களின் குணங்கள்

நிறங்களுக்கென்ன்றே சில குணாதிசயங்கள் இருக்கின்றன. அவை நம் வாழ்வில் சில பல மாற்றங்கள் ஏற்படவும் காரணமாய் இருக்கின்றன. வெவ்வேறு நிறங்களின் குணாதிசயங்கள் பற்றி அறிந்து கொள்வது நம் வாழ்வில் நலம் பெற உதவுகிறது. இந்த நிறங்களைத் தகுந்த விதத்தில் தியானிப்பதன் மூலம் அவற்றின் முழுமையான பலனைப் பெறலாம்.

சிவப்பு:

சக்தி, ஆற்றல் மற்றும் வலிமையை குறிக்கும் நிறம் சிவப்பு. புற்று நோயை குணப்படுத்திடவும், புண் மற்றும் காயங்களை ஆற்றிடவும் பெரிதும் உதவுகின்றது இந்நிறம். மேலும் இந்நிறம் குளிர் பாகங்களில் வெப்பத்தை ஏற்படுத்தி உடலில் ஏற்பட்டுள்ள வலியினைக் குறைத்திட உதவிடும். இரத்தம் மற்றும் இரத்த ஓட்டம் சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனச்சோர்வினை நீக்கி தெளிவு அளிக்கும் வலிமை பெற்றது சிவப்பு நிறம்.

இரத்த அழுத்தம், மனக் கவலை உடையவர்கள் இந்நிறத்தை உபயோகப்படுத்துவதைத் தவிர்த்திடவும். அதிக நேரம் சிவப்பு நிறம் உங்கள் மேல் படுவதால் மனம் சஞ்சலம் அடைந்திட வாய்ப்புண்டு.

தொழில் நடைபெறும் இடங்களில் சுவர்களுக்கு சிவப்பு வண்ணமோ, சிவப்பு நிறத்தில் திரை அல்லது தரை விரிப்புகளை உபயோகிப்பது பண வரவு அதிகரித்திட வழி வகுக்கும். நீங்கள் விற்பனைப் பிரிவில் இருப்பவரா? உங்கள் உடைகளில் சிவப்பு நிறம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

செம்மஞ்சள்:

உடலில் நோய் எதிர்ப்பு மற்றும் ஜீரண சக்தி அதிகரித்திடவும், மார்பு, சிறுநீரகம் சம்பந்தமான நோய்களை குணப்படுத்திடவும் பெரிதும் உதவுகிறது செம்மஞ்சள் நிறம். சிவப்பு நிறத்தைப் போலவே செம்மஞ்சள் நிறத்தையும் அதிக நேரம் உபயோகிக்கக்கூடாது. நரம்புத் தளர்ச்சி உடையவர்கள், உணர்ச்சி வசப்படுபவர்கள் மேல் இந்நிறத்தை உபயோகிப்பதைத் தவிர்த்திடவும்.

பீச் (Peach):

பீச் நிறம் அமைதி மற்றும் உண்மையைக் குறிக்கக்கூடியது. மனம் சமநிலை அடைந்திட உதவுகிறது.

மஞ்சள்:

அறிவாற்றலையும், விரைவாக சிந்தித்து செயலாற்றுவதையும் குறித்திடும் நிறம் மஞ்சள். குழப்பமான மனநிலையில் உள்ளவர்களுக்கு இது நல்ல பலனை அளித்திடும். இந்நிறத்தையும் அதிக நேரம் உபயோகிப்பதைத் தவிர்த்தல் நல்லது. செம்மஞ்சள் நிறத்தைப் போல் மஞ்சள் நிறத்தையும் நரம்பு தளர்ச்சி உடையவர்கள், உணர்ச்சி வசப்படுபவர்கள் மேல் உபயோகப்படுத்துவதைத் தவிர்க்கவும்.

பச்சை:

கடந்த கால நினைவுகளைக் குறிக்கும் பச்சை நிறம், காயங்களை ஆற்றிட உதவுகிறது. உணர்ச்சி வசப்படும்போது ஆறுதல் அளித்து அமைதி நிலவச் செய்கிறது பச்சை நிறம். வளர்ச்சியில் பெறும் பங்கு வகிக்கும் இந்நிறம் உடைந்த எலும்புகளை சேர்த்தல், திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுதல் போன்றவைகளுக்குப் பயன்படுகிறது. நம் உடலின் ஓரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு DNAவின் திருகு சுழல் சக்தி மூலம் விழிப்பு ஏற்படுத்தி வலிமை அளிக்கும் நிறம் பச்சை. உடல் நிலை சரியில்லாதவர்கள் மேல் இந்நிறத்தைப் பயன்படுத்துவது நல்ல பலனை அளித்திடும். மருத்துவமனைகளில்  இந்நிற படுக்கை விரிப்புகளை உபயோகப்படுத்துவதைக் காணலாம்.

நீலம்:

மின்சாரத்திற்கு நாம் அளித்திருக்கும் நிறம் நீலம். உண்மை, மனத்தெளிவு, இசை ஞானம் ஆகியவைகளைக் குறித்திடும். சாந்தப்படுத்துதல், அமைதி நிலவச் செய்தல், புனர்வாழ்வளித்தல், பாதுகாத்தல் ஆகியவற்றிற்கு உகந்தது நீல நிறம். காய்ச்சல் குறைந்திட, நரம்புத் தளர்ச்சியை நீக்கிட, தீக்காயங்களை ஆற்றட பயன்படுகிறது இந்நீல நிறம்.

ஊதா:

நம் உடலையும் நம்முள்ளே இருக்கும் ஆன்மாவையும் இணைத்திடும் நிறம் ஊதா. மனநிலை, நரம்புத் தளர்ச்சி பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளித்திட உதவுகிறது இந்நிறம். வாயு பிடிப்பு, வலிப்பு முதலிய நோய்களை குணப்படுத்துவது மட்டுமில்லாமல் வலி, முறிந்த எலும்புகளைச் சேர்த்தல், திசுக்களின் வளர்ச்சி ஆகியவற்றிற்கும் உதவிடும் நிறம் ஊதா. அதிக நேரம் உபயோகப்படுத்துவதால் வாழும் ஆசை குறைந்திட வாய்ப்புண்டு.

லாவண்டர் (Lavender):

நடுநிலையை உணர்த்திடும் நிறமான லாவண்டர், ஆன்மாக்களிடம் உரையாடி குணப்படுத்தும் பயிற்சிகளுக்கு உதவுகிறது. எந்த நிலையிலும் உள்ள கர்மவினையை அழித்திடும் ஆற்றல் உடைய நிறம் லாவண்டர்.

வெள்ளை:

ஒளிக் கதிர்கள் அனைத்தும் தன்னுள்ளே இருக்கப்பெற்ற நிறம் வெள்ளை. விழிப்பு நிலை ஏற்படுத்தும் வலிமையுடைய நிறமான வெள்ளை, நிலையான அமைதி தந்து ஆறுதல் அளிக்கக் கூடிய வலிமை கொண்டது.

வெள்ளி:

அமைதி, விடாமுயற்சியினைக் குறித்திடும் நிறமான வெள்ளி, உடலில் உள்ள அனாவசிய வியாதிகளை, பிரச்சனைகளை நீக்கிட உதவிடும். புற்று நோயைக் குணப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

தங்கம்:

தங்க நிறம் மனதின் விழிப்பு நிலையில் உள்ள ரசவாதத்தைக் குறைப்பதாகும். வியாதிகளை குணப்படுத்துவதில் பெறும் ஆற்றல் வாய்ந்தது. மிகவும் வலிமையான நிறமானதால் இதனை அனைவராலும் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. ஆதலால் மிகவும் குறைந்த நேரம் தங்க நிறத்தை உபயோகிப்பது நன்மை அளிக்கும். உடலுக்கும் மனதிற்கும் அனைத்து விதங்களிலும் வலிமை சேர்க்கும் வல்லமை கொண்டது இந்நிறம்.”

About The Author

1 Comment

Comments are closed.