நிலாச்சாரல் மின்மடல் சந்தா புதுப்பித்தல் தொடர்பான அறிவிப்பு

அன்புள்ள வாசக நெஞ்சங்களுக்கு,

வணக்கம். நலம்தானே?

நிலாச்சாரல் இதழின் வாராந்திர வெளியீடுகள் பற்றிய தகவல்களை மின்னஞ்சல் சந்தாதாரர்கள் உடனுக்குடன் செய்தி மடலாக (Newsletter) உங்கள் மின்னஞ்சலில் பெற்று வந்திருப்பீர்கள். தற்போது மேம்படுத்தப்பட்ட வசதிகளைப் பெறும் பொருட்டும், எதிர்பாராத தாமதங்களைக் களையும் பொருட்டும் புதிய செய்தி மடல் வழங்கிக்கு (Server) நிலாச்சாரல் மாறியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, தடையில்லாமல் செய்தி மடல்களை தொடர்ந்து உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிட, தங்கள் மின்னஞ்சல் சந்தாவினைப் புதுப்பித்துக் கொள்ளுமாறு அன்புடன் கோருகிறோம். இணைய விரும்பும் புதிய வாசகர்களும் இவ்வசதியினைப் பெற்று மகிழுமாறு வேண்டுகிறோம்.

தங்கள் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி மட்டும் கொடுத்தாலே போதுமானது. கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தினைப் பூர்த்தி செய்து அனுப்பிப் பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.

அன்புடன்
நிலாக்குழு

About The Author

3 Comments

Comments are closed.