நீ ஊரிலில்லா நேரத்தில்

நீ ஊரிலில்லா நேரத்தில்
என்னுடன் நீ கொஞ்சிய வார்த்தைகளும்
உன்னுடன் நான் கோர்த்த கவிதைகளும்
நம் வீட்டுப் படுக்கையறையில்
சுகித்துக் கொண்டிருக்கின்றன
சப்தங்கள் எழாமல்.

இங்கிதம் கருதி
நுழைவதில்லை நானும்.
அலைபேசி வழி வரும்
அழகுன் குரல் மட்டும்
பொறாமையோடு பார்க்கிறது
நம் வீட்டில் சுற்றியபடி.

About The Author