நெடுஞ்சாலையில் பூத்த மலர்

நெடுஞ்சாலை நடுவில்
அகல விரிந்த கண்களுடன்
தலை தப்பிய சிறு நாய்…
யரோ பாடம் பண்ணி வைத்தாற்போல்
தலை தவிர அனைத்தும்
நசுங்கிப் பாயாகி
காட்சிப் பொருளென்றானது.

கருணை உள்ளம் கொண்ட
வாகன ஓட்டிகளோ
தலை தவிர்த்து
உடல் மிதித்துச் சென்றனர்.

மலங்க விழிக்கும் நண்பா!
இனி…
நிமிர்ந்த தலை
தாழ்த்தினாலே போதும்…
சமன் செய்ய

About The Author

1 Comment

Comments are closed.