நெல்லிக்காய் முரப்பா

தேவையான பொருட்கள் :

நெல்லிக்காய்கள் – 1/4 கிலோ கிராம்
சர்க்கரை – 300 கிராம்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை.

செய்முறை :

நெல்லிக்காய்களைக் கழுவி ஒரு துணி மீது உலரவைத்த பின் ஆவியில் வேக வைத்து கொட்டைகளை நீக்கி விட்டு பல்லு பல்லுகளாகப் பிரிக்கவும்.

கனமான ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை சிறிது நீர் விட்டு, கை விடாமல் கலந்து விடவும். கரைந்ததும், குங்குமப்பூவையும், வெந்த துண்டுகளையும் சேர்த்து கலந்து கம்பி பாகு வரும் வரை கலந்து விடவும்.

பதமாக இருந்தால் குளிர்சாதனப்பெட்டியில் வைக்காவிட்டாலும் சில மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.

**************************************************************************

About The Author