நெல்லும‌ணிப் பிள்ளை

விடியக்கால அஞ்சு மணி
சங்கு கொஞ்சம் பலத்து ஊத
கால் ரெண்டும்
பரபரக்கும் – மேஸ்திரி
வந்து முறைப்பாரு – மேய்ப்பரு
போல தெருமுக்குல!
மாடுகள் யாருன்னு
சொல்லணுமோ!

விளைஞ்சு கனத்துத்
தொங்கும் கருத அறுத்துக்
களத்துல சேர்க்க
நீண்ட பொழுது சாயும்
சுமையும் முழுசாக் குறையும்.

சூடடிச்சக் கதிரோட
அத்துக்கிட்ட நெல்லுமணி
தரையோட ஒட்டிக்கிட்டு
மண்வாசம் கலந்து வீசும்!

மரக்கால் நிறைச்ச மணிய
மடியில கட்டிக்கிட்டு
புள்ளத்தாச்சி போல
பெருத்த வயித்த
ஒருமுறை தடவிப்பாத்து
பூரிச்சுப்போவா பூவாத்தா!

About The Author