நேந்திரம்பழ அல்வா

தேவையான பொருட்கள் :

முதிர்ந்த நேந்திரப்பழங்கள் – 3
சர்க்கரை – 400 கிராம்
ஏலக்காய் – 3
நெய் – 150 கிராம்
முந்திரிப்பருப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

நேந்திரம்பழத்தைக் கழுவி மேல் தோலுடன் நான்கு பாகமாக வெட்டி ஆவியில் பத்து நிமிடங்கள் வேக விட்டு மிக்சியில் நீர் விடாமல் அரைக்கவும்.

ஒரு வாணலியில் அரைத்த விழுதைக் கொட்டி, சர்க்கரை சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும். கொஞ்சம் கெட்டியானதும் நெய், பொடித்த ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்புகள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும்.

பதமாக வந்த பிறகு தட்டில் கொட்டி சமப்படுத்தி துண்டுகள் போடவும். மிகவும் சுவையாக இருக்கும்.

About The Author