பக்கோடா கிறிஸ்ப்

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 2 1/2 கப்,

கடலை மாவு -1 கப்,

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது),

கொத்துமல்லி – 1/2 கட்டு (பொடியாக நறுக்கியது),

வெந்தியக்கீரை – ஒரு கைப்பிடியளவு,

உருளைகிழங்கு (அ) கோஸ் துருவல் – ஒரு கைப்பிடியளவு ,

பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது ),

இஞ்சி பேஸ்ட்- 1/4 தேக்கரண்டி,

எள் – 1 தேக்கரண்டி,

உப்பு, பெருங்காயம் – தேவையான அளவு,

மஞ்சள் தூள் -2 சிட்டிகை,

செய்முறை:

மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் நன்றாகக் கலந்து ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு சிறிது சிறிதாக நீர் விட்டுப் பிசிறி அதனுடன் சூடாக காய்ந்த எண்ணெயை ஊற்றி நன்கு கலந்து விட்டு எண்ணெய் காய்ந்ததும் மாவை உருட்டாமல் சிறிது சிறிதாகக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொறித்து சூடாகப் பரிமாறவும்.

About The Author

1 Comment

Comments are closed.