பனாரஸ்

யாரோ ஆற்றோரம்
காத்திருக்க
ஆற்றுகிறான்
சிவன்
மறைந்த
காயங்களை

யாரோ ஆற்றோரம்
கேட்டிருக்க
சோர்ந்த பூசாரிகள்
தன் குரல்களை மறைத்து
வலுவில் ஆடிய
புகையின் நடனத்துடன்

யாரோ அறிவர்
ஆற்றின் ரகசியங்களை
மற்ற எல்லா
ரகசியங்களும்
மூழ்குமிடம்

வளரட்டும்
நிசப்தத்தினுள் சென்று
வேறொரு வெளியில்
கேட்கவென்று

வேறொருவர்
காத்திருக்கிறார்
ஆற்றோரப் படிகளில்
அமர்ந்து

நேரமாகிறது
வீடு போக

ஆனால்,
வீடோ இருக்கிறது
இந்த ஆற்றின்
அனைத்து
ரகசியங்களுடனும்

(சொற்கள் தோற்கும்பொழுது
– மின்னூலில் இருந்து)

About The Author