பயணம்

‘கென்டிங்’கின்
குளிரில்
உறைந்தன
உன் கண்கள்
சீட்டுகளின் மீது
ஆர்வத்தின்
வெப்பத்துடன்

மற்றவரின் பொறாமை
இல்லை.
எனினும்,
எம் லயங்கள்
வளைவுகளுக்கேற்ப
மலையோ
அசைந்தது
அருளுக்கேற்ப

ஏரிக்கு வெளியில்
நிசப்தம்
பேசினோம்
நாம்
உணர்ச்சிகளின்
சேர்க்கையில்
பிறந்த
சொற்களற்ற மொழியை

ஒருநாள்
பாடும்
நட்சத்திரங்கள்
வானம் உரைக்கும்
எப்படி நீ
திருடினாய்
இதமாய்
அவற்றின்
அழகை
மாற்றாக

ஒரு பரிசு
இந்த
கனவின் பதிவு

(சொற்கள் தோற்கும்பொழுது – மின்னூலில் இருந்து) 

About The Author