பல்சுவை சத்து அடை

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி – 1½ கோப்பை
பச்சரிசி – ½ கோப்பை
துவரம் பருப்பு – ¾ கோப்பை
கடலைப் பருப்பு – ¼ கோப்பை
பயத்தம் பருப்பு – ¼ கோப்பை
கொண்டைக் கடலை – ¼ கோப்பை
பட்டாணி – ¼ கோப்பை
கேழ்வரகு – ¼ கோப்பை
கொள்ளு – ¼ கோப்பை
தனியா – 2 தேக்கரண்டி
மிளகாய் – 10
இஞ்சி – சிறிது
வெங்காயம் – 3
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை:

கொண்டைக் கடலை, பட்டாணி, கேழ்வரகு, கொள்ளு முதலியவற்றை 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

இட்லி அரிசி, பச்சரிசி, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு முதலியவற்றைக் கழுவி ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

இஞ்சியைத் தோல் சீவி நறுக்கிக் கொள்ள வேண்டும்.

நன்கு ஊறிய பின் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வாணலியில், சிறிது எண்ணெயில் வதக்கி மாவில் சேருங்கள். கறிவேப்பிலை போடுங்கள்.
இப்பொழுது, மாவைத் தோசைக்கல்லில் அடைகளாக ஊற்றி, இரு பக்கமும் நன்கு சிவக்க வேக வைத்து எடுக்க வேண்டியதுதான். சுவையான  ‘பல்சுவை சத்து அடை’ தயார்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author