பாபா பதில்கள்-ஆண்டாள் சிறப்பு

ஆண்டாள் சிறப்பு

கூரத்தாழ்வார் என்று சொல்லக் கூடிய ஒருவர் ராமானுஜருடைய அத்யந்த சிஷ்யனாக பகவானுக்குக் கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் மழை என்பதினாலே அவராலே பிக்ஷாவந்தனம் செய்ய முடியவில்லை. இரண்டு நாளாகப் பட்டினி கிடந்தார். அவருடைய மனைவி சொன்னாள். இந்த உலகத்தில் இருக்கிறவர்கள் ஆடு மாடுகளுக்குக் கூட வேளா வேளைக்குத் தீனி போடுகிறார்கள். இந்த ரங்கநாதனை இவ்வளவு நம்பிக் கொண்டிருக்கிறீர்கள். அவன் உங்களை ரெண்டு நாட்களாகப் பட்டினிப் போட்டிருக்கிறார் என்று சொன்னாள். கரெக்டாக ஒரு மணி நேரம் கழித்து ரங்கநாதர் கோவிலிலிருந்து மடப்பள்ளி நம்பி அங்கே கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறவர். நேராக கூரத்தாழ்வானுடைய வீட்டிற்கு வந்து கூறுகிறார். பகவான் என்னைத் தட்டி எழுப்பி, ‘கூரத்தாழ்வானுக்கு urgent- ஆக எனக்குத் தளிகை செய்வது போல் செய்து கொண்டு போய் பிரசாதமாகக் கொடுத்துவிட்டு வா’ என்று சொன்னார்.

அந்த மாதிரி உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் தன்னிடத்தில் எதை யாசித்தாலும் அவர்களுக்கெல்லாம் கொடுக்கக் கூடிய நிலையில் அந்த ரங்கநாதன் இருக்கிறான் என்பதற்கு இது ஒரு உதாரணம். அதாவது அவர்கள் ஏதோ வீட்டிலே ஆடு மாடுகளுக்கு எல்லாம் இலை தழை போடுகிறவர்கள் இருக்கிறார்கள். பகவான் உங்களுக்கு எதுவும் செய்யவில்லையா என்று கேட்கிறபோது படியளக்க வந்தான் என்பது தான் நம்முடைய ஆன்மீகம். அந்த வகையில் மானிடர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கிலேன் கண்டாய் அம்மானாய் என்று சொல்கின்ற வகையில் ‘நான் மனிதர்களை மணந்து கொள்ள மாட்டேன். மணந்தால் ரங்கநாதனோடு தான்’ என்று சொல்லக் கூடிய ஒரு பக்குவத்தில் உண்மையாக பகவானைத் தேடிக் கொண்டிருந்த ஒரே காரணத்தினால், அந்த அரசனிடத்திலே சொல்லி ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரைக்கும் வழி எங்கும் தோரணங்கள் கட்டி பல்லக்கில் அவளை ஏற்றிக் கொண்டுவந்து தன்னோடு அவளை ஐக்கியப்படுத்திக் கொண்டான் என்பது தான் ஆண்டாளுடைய வரலாறு.

கனவு கனவு அல்ல. கனவு நனவு கூட ஆகிறது என்பதற்கு ஆண்டாளுடைய வாழ்க்கை ஒரு உதாரணம். ‘ஸ்ரீ வில்லிபுத்தூர் விளக்கு’ நாட்டிய நாடகத்திலே ஒரு குறிப்பிட்ட காட்சியிலே நாரதர் வருகிறார். பகவானிடத்தில் அவர் வந்து தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக அனுப்பி வைக்க சொன்ன மாதிரி ஒரு காட்சி வருகிறது. அதையே வேறு மாதிரி கூடச் சொல்லுவார்கள். சுவாமி வேதங்களை ரட்சிப்பதற்காக பூமி சமுத்திரத்திற்கடியில் மூழ்கி இருந்தபோது அவர் வராக அவதாரம் எடுத்து அந்த பூமியை மீட்டுக் கொண்டு வந்தார். அப்பொழுது கூட அந்த பூமாதேவி சந்தோஷமாக இல்லை. இவர் கேட்டார்- நான் தான் உன்னை சமுத்திரத்திற்கடியில் இருந்து மீட்டுக் கொண்டு வந்துவிட்டேனே இன்னும் ஏன் கலக்கமாக இருக்கிறாய் என்று கேட்ட போது அவள் சொல்லுகிறாள்- பூமா தேவியாகிய என்னை நீ கரைதேற்றி விட்டாய். ஆனால் இந்த பூ உலகத்தில் இருக்கிற என்னுடைய பிள்ளைகள் எல்லாம் கடைத்தேறவில்லையே என்று கதறி அழுதபோது சரி சரி உனக்கு இவ்வளவு தாய்மை இருக்கிறது . அதனாலே நீயே ஒரு அவதாரம் எடுத்துவிட்டு அவர்களுக்கு எல்லாம் ஏதாவது ஒரு வழிகாட்டு போ என்று அந்த பகவான் சொன்னார் என்று ஒரு கதை உண்டு.

அந்த மாதிரி அகழ்வாரை தாங்கும் நிலம் போல தன்னை இகழ்வாரை பொறுத்தல் தலை- என்பது போல இந்த உலகத்தில் பூமாதேவியினுடைய திருஅவதாரம் தான் ஆண்டாளாக வந்தது. இந்த கலியுகத்தைப் பொறுத்த மாத்திரம் மக்களுக்கு எந்தவிதமான யாகாதி ஹோமங்களும் செய்வதற்கான அவகாசம் இருக்காது என்பதாலே சாதாரணமாக ஒரு பக்தியின் மூலமாக இறைவனை அடைய முடியும் என்று தன்னுடைய வாழ்க்கையை ஒரு பாடமாக்கி அவள் உணர்த்திவிட்டுப் போனாள். வேறு ஒன்றுமே செய்யவில்லை. சூடிக் கொடுத்தாள், சூடக் கொடுத்தாள். அப்போது, வேறு ஒன்றுமே செய்யத் தேவையில்லை. நீங்கள் கூட பகவானை நினைத்து ஒரு புஷ்ப கைங்கர்யம் செய்யலாம். அதன் மூலமாக பகவானுடைய அனுகிரகம் உனக்குக் கிடைக்கும் என்பது ஆண்டாளுடைய வரலாறு.

ஆண்டாள் பெரிய தவமோ, காட்டிலேயோ, குகையிலேயோ போய் உட்கார்ந்து செய்யவில்லை. சாதாரணமாக இருந்தாள். ஆனால் எப்போதும் சதா சர்வகாலமும் பகவானுடைய நினைப்பில் இருந்தாள் என்பது முக்கியம்.

இன்னொரு வகையில் பார்த்தால் அவள் பாடிய பாடலிலே நீராடப் போதுவீர், போதுமினோ நேரிழையீர் என்று வரும். அப்போது நீராடப் போதுவீர் என்று பாடிய ஆண்டாளுடைய தகப்பனார் எப்படிப் பட்டவர் என்று நீங்கள் பார்க்க வேண்டும். மஞ்சள் நீராட வாராய் என்று சொல்லி உண்மையாகவே கிருஷ்ணனை தன்னுடைய குழந்தையாகவே நினைத்து நான் உன்னை குளிப்பாட்டணும் ஓடி வா என்று பாடிக் கொண்டிருந்த மகானுபாவர். உண்மையாகவே கிருஷ்ணனை தன்னுடைய குழந்தையாகவே பாவித்துக் கொண்டிருந்தார். அந்த மாதிரி நினைத்ததால் தான் அந்த பகவான் பல்லக்கிலே வருகிற போது அவர் கண்ணுக்கு மாத்திரம் அவன் ரொம்ப இளைச்ச மாதிரி தெரிந்ததாம். அதனால் தான் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்… என்று பாடினார். பெரியாழ்வார் பெருமாளுக்கு பல்லாண்டு பாடியதன் நோக்கம்- அவருடைய கண்ணுக்கு செல்லப் பிள்ளை இளைத்திருக்கிறான் என்ற பாவம் வந்ததினால் அப்படி பாடினார்.
அப்படி வருமா என்றால் வரும். கடவுளோடு நாம் ஐக்கியமாகி இருக்கிற போது அப்படி வரும். நம்முடைய தேவாரத்திலே கூட அந்த மாதிரி வந்தது. நடராஜப் பெருமாள் நிற்கிறாராம். அப்பர் சுவாமி வந்து கொண்டிருக்கிறார். அதைப் பார்த்தவுடனே அப்பருக்கு என்ன தோன்றுகிறதாம்? என்று வந்தாய் என்று குறிப்பு எடுத்தேன். வந்து நின்றவுடனே இப்படிப் பார்க்கிற போதே எப்போ வந்தாய்? என்று கேட்கிற மாதிரி தோன்றுகிறது என்று சொன்னார். தன்னைக் கேட்கிற மாதிரி தோன்றுகிற பக்குவமும், பாவமும், அந்த அனுபவமும் எப்பொழுது வரும் என்று சொன்னால் நீ உன்னை அந்த பகவானிடத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். உன்னுடைய மனதை வைத்துக் கொண்டு ஏதாவது ஒரு பாவத்தில் as a friend, as a father, as a daughter or as a lady love or anything- ஏதாவது ஒரு பாவத்தில் அவனைப் பிடித்துக் கொள்கிறபோது அந்த அனுபவங்களை நீ கூட நுகர முடியும். அனுபவங்களை மாந்திக்களிக்க முடியும் இந்த உலகத்தில்.

About The Author