பாபா பதில்கள்-ஆத்மா

What is my athma and destiny, destination?

What is my athma என்று தெரிந்து கொள்வதுதான் destiny. வேறு ஒன்றுமே இல்லை. இந்த உலகத்தில் நாம் பெறுகிற எல்லா விதமான அனுபவங்களுக்கும் நம்முடைய ஆத்மாவினுடைய பரிபக்குவத்தை நம்மை உணரச் செய்வதற்கான ஒரு வழிமுறை அவ்வளவுதான். Once we understand the answer for athma then all the matters connected to the body were all forgotten and burried. சரீரத்தை மீறிய ஒரு நிலையை அடைவது சாத்தியம் தான். அது வாசனைகள் நிறைவடைந்த நிலையில் தான் முடியும். அந்த நிலை தான் ஆத்மாவின் உன்னதமான நிலை. That is the peak of success for the sprit. Body is just a container. Body has no relevance in the sadhana path. முதல் கேள்விக்கு விடை இரண்டாவது கேள்வி. அதற்கு மேல் ஒன்றும் இல்லை.

இந்த Destination என்றால் Destination -ஏ நமக்குள்தான் இருந்தது அதை வெளியே தேடிக் கொண்டிருந்தோம் என்று புரிந்து கொள்கிற நிலைமை. Destination itself was within us. We were not knowing, we were searching it else where. We were searching it out. That is the main problem. மீனாட்சி அம்மன் கோயில் வாசலில் நின்று கொண்டு மீனாட்சி அம்மன் கோயில் எங்க இருக்குதுன்னு கேட்டா அது எவ்வளவு பையித்தியக் காரத்தனமாக இருக்கும். சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் நின்று கொண்டு சென்ட்ரல் ஸ்டேஷன் எங்க இருக்கிறதுன்னு கேட்கிற மாதிரி. நாமே இறைத்தன்மையை நமக்குள் வைத் திருக்கிற mobile station
மாதிரி. ஆனால் அது எங்க இருக்கிறது என்று நாம் தேடிக் கொண்டிருக் கிறோம். We have the destination within us. We don’t know the direction. Destination நமக்குள்ளேயே இருக்கிறது, direction தெரியவில்லை. There we differ.

கேள்வி: எண்ணங்கள் (thought bundles) இருக்கிறவங்க தான் பூமியிலே வந்து பிறக்கிறாங்க என்றால் அது ஒரு பிறவி தான் கொடுக்க முடியுமா அல்லது multiple births கொடுக்க முடியுமா? What is the reason for so many people on this earth?

எண்ணங்கள் என்பது எல்லாவிதமான ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வகையிலே இருக்கு. சாதாரணமாக ஒரு கரப்பான்பூச்சியைக் கூட பாருங்க, நீங்க காலைத் தட்டினீங்கன்னா அது ஒரு மாதிரி பார்க்கும். அதற்கும் எண்ணங்கள் இருக்கு. May be communication கிடையாது. It may not have a language.But, கொஞ்சம் evolve ஆகி வந்தவுடனே குரங்கிற்கு verbal communication இருக்கு. அது உன்னைப் பார்த்து முறைக்கும். They are able to communicate. So, by evolution, thoughts க்கு ஒரு outlet கிடைக்குது. ஒரு சின்ன எறும்புக்குக் கூட எண்ணம் இருக்கிறது. புத்தர் சொன்ன கதை: ஒரு யானை காட்டுத் தீயிலே தன் காலடியிலே சரண்புகுந்த முயலை காப்பாற்றுவதற்காக ஓடாமல் இருந்தது. புத்தர் சொல்கிற போதிசத்துவருடைய reincarnation philosophyயிலே. அப்போ அந்த எண்ணத்திற்குரிய reward யானைக்கு கிடைத்தது அல்லவா! இரண்டாவது கர்மா எப்படி link ஆகி வருகிறதுன்னா ஆதிசங்கரர் சிருங்கேரிக்கு சென்றபோது அங்கே ஒரு பாம்பு நிறை கர்ப்பிணியான ஒரு தவளைக்கு குடை பிடித்துக் கொண்டிருந்தது. அப்போ தெரிந்தோ தெரியாமலோ அந்த thought உடைய repercussion இருந்திருக்கு. இல்லைன்னா எப்படி ஒரு தவளைக்கு பாம்பு குடைபிடிக்கும்? எதோ ஒரு பூர்வஜன்ம nobilityஇருக்கு. தெரிந்தோ, தெரியாமலோ direct ஆகவோ indirect ஆகவோ அவற்றிற்கும் ஏதோ ஒரு கர்மா இருக்கு. அந்த கர்மாவினுடைய அனுசரணையில் they also have birth cycles. ஆத்மா என்பது எல்லாவற்றிலும் இருக்கு. So, it is atma that takes different bodies from single cellular to multi cellular. அதனாலே ஆத்மாவினுடைய பயணம் என்று வருகிறபோது whether it is a cycle or an aeroplane -the travel is happening. Only the superiority of the vehicle is different.”

About The Author