பாபா பதில்கள் – சிதம்பர ரகசியம் (3)

கேள்வி: நடராஜருடைய pose, காஸ்மிக் டான்ஸ் – அதனுடைய தத்துவம் என்ன?

(Continuation)

எல்லாவற்றையும் விட பெரிசு ஐந்தாவது மண். அதில் வாசனை – கந்தம் வருது. மழைநீர் பூமிமேல பெய்கிற போது பார், அதில ஒரு நல்ல ஸ்மெல் வரும் (மண்வாசனை). அப்போது இந்த உலகத்தில் தான் எல்லாவற்றையும் சாதிக்கமுடியும்.

இந்த பூமியைப் பெரிய விஷயம்ன்னு பெரியவங்க எதுக்குச் சொன்னாங்கன்னா, இதில சப்தமும் இருக்கு, ஸ்பரிசமும் இருக்கு, வடிவமும் இருக்கு, டேஸ்ட்டும் இருக்கு. வாசனையும் இருக்கு. அதனால் இந்த உலகத்தில் இந்த ஐம்பூதங்களில் ஏதாவது ஒன்று செயல்படணும் என்றாலும் பூமியிலதான் முடியும். அதனால் தான் தேவர்களும் கூட பூவுலகில் வந்து பிறக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். மற்ற இடத்தில் கிடையவே கிடையாது. வெறும் சப்தத்தை வைச்சுக்கிட்டு என்ன செய்வாய்? வெறும் ஸ்பரிசத்தை வைச்சுக்கிட்டு என்ன செய்வாய்? So, this is the total combination. அப்ப, நடராஜர் தத்துவம் நான் சொன்னமாதிரி யாகங்களில் வருகிறது. அணுவை பிளந்தால் வருகிறது.

Secret of Chidambaramஎல்லாவற்றுக்கும் மேல் நாம கூட வரவழைத்து காண்பிச்சிருக்கோம். பெசன்ட்நகரில் (1996), எனக்கு கற்பூரம் காண்பிக்கிறார்கள். அதை போட்டோ எடுத்த போது எப்படி வருதுன்னா, ஆகாசத்தில் யானை தும்பிக்கை மாதிரி வந்திருக்கிறது சமஸ்கிருத ‘ஓம்’ ( )- (இன்வெர்ட் பண்ணா), தலைகீழா வைச்சா எப்படி இருக்குமோ அந்த மாதிரி வருகிறது. முதலில் வார்த்தையிருந்தது. ஆகாசத்தி லிருந்தது சவுண்ட்தான். அப்ப, ஓம் அந்த form-ல வந்திருக்கு. வராகர்கிட்டேயிருந்துதான் திருமலை வேங்கடேசபெருமாளே ஒரு இடத்தைக் கேட்டு வாங்கினார். அப்போது, பூமி யாருடையது? வராகருக்குச் சொந்தமானது. அந்தப் படத்தில கீழே ஒரு ஓம்வந்திருக்கு. மேலேயிருக்கிற ஓம் (உல்ட்டாவா) தலை கீழா வந்திருக்கிறது. கீழேயிருக்கிற ஓம்3 மாதிரி நேரா வந்திருக் கிறது. அதில், ஐந்து ஒளி வந்திருக்கின்றன. அவைதான் பஞ்சபூதங்கள். கீழே (பூமியில்) வந்திருக்கிறது. அந்தப் படத்தில் பூமியையும் தொடாமல், ஆகாயத்தையும் தொடாமல் நடுவில் ஒரு உருவம் வந்திருக்கிறது. அது எப்படி இருக்கிறதுன்னா, மூன்று நாமம்தான் இருக்கு, முகம் கிடையாது. வலது கை ஆசீர்வதிக்கிற மாதிரி இருக்கு. இடது கால் தூக்கிய திருவடியாக இருக்கிறது.

இன்னொரு கால் கீழேயிருக்கு. ஆனால் அது பூமியைத் தொடவில்லை. அப்போ, "Cosmic Dance of Nataraja"ன்னு சொல்றது இதுவரைக்கும் வெளிப்பட்ட atomic diffusion ல வந்தது, நடராஜர் வந்தது எல்லாவற்றையும் வைச்சுப் பார்க்கும்போது, சிவசங்கரத்தை படம் எடுத்தால் கூட அந்தமாதிரிதான் வந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட இது இன்னும் தெளிவாகத் தெரிகிறது.

இரண்டு ஓங்காரங்கள் இருக்கின்றன. ஒன்று மேலே இன்னொன்று கீழே. இந்த இரண்டு ஓம்களில் ஒன்று தலைகீழாக இருக்கு. ஒன்று நேராக இருக்கு. விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்றால், இரண்டு மின்காந்தங் களை எதிரும் புதிருமாக வைக்க வேண்டும். நடுவில் ஒரு இரும்பை வைச்சா it will be oscillating. அது மேலேயிருக்கிற காந்தத்தையும் தொடுவதில்லை, கீழேயிருக்கிற காந்தத்தையும் தொடுவதில்லை. அந்தரத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். இதை விஞ்ஞானத்தில் நிரூபித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் மேலே இருக்கிறது இன்வெர்டட் ஓம், கீழேயிருக்கிறது நேராயிருக்கிற ஓம்-இரண்டும் மின் காந்தங்கள், இதற்கு நடுவில (Proton, Newtron, Electron) புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் சொல்ல லாம் அல்லது (Alpha, Beta, Gamma) ஆல்பா, பீட்டா, காமான்னு சொல்லலாம் அல்லது கோவிந்தசாமின்னு சொல்லலாம். ஏதோ ஒன்று. மூணு நாமம்தான் இருக்கு அந்த முகத்திலே. அவர் இடதுகாலை தூக்கிக்கிட்டு வலது கையை அபயஹஸ்தமாக வைச்சுக் கிட்டு பூமியைத் தொடாமல் சுற்றிச் சுழன்று ஆடிக் கொண்டிருக் கின்றார்னு தெரிகிறது.

(தொடரும்)

About The Author

1 Comment

  1. chocks

    சிதம்பர ரகசியம் கருத்து மிகவும் அருமை சொக்கு

Comments are closed.