பாபா பதில்கள் – நல்லவன் வல்லவன்

ஒருத்தருடைய நல்ல தன்மையை மற்றவர்கள் அவர்களுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும்போது என்ன செய்வது?

திரு. சிவ சங்கர் பாபா அவர்களின் உரையிலிருந்து,

நல்லவனாக மாத்திரம் இருந்தால் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும். அதனாலே நம்முடைய நல்ல தன்மையை யாராவது misuse பண்றாங்கன்னு சொன்னால் you should be careful. இந்த மாதிரி carefulஆக இருப்பதற்கு நமக்கு வாழ்க்கையிலே directions தேவைப்படும். ‘வாழ்க்கையிலே நாம் எதற்கு வந்திருக்கிறோம், என்ன சாதிக்க ஆசைப்படுகிறோம், நம்முடைய aim என்ன?’ இவ்வளவுதான். ஒரு சாதாரண முகஸ்துதிக்காகவோ அல்லது நாம் யாரையும் displease பண்ணிவிடக் கூடாது என்பதற்காகவோ நாம் எல்லாத்துக்குமே compromise பண்ணிக் கொண்டிருந்தால் we will end up in a mess and restless mind. அதற்கு ‘என்னுடைய வாழ்க்கையிலே வரக் கூடிய stepsலே நான் பாசிடிவாக போய்க் கொண்டிருக்கிறேனா அல்லது divert ஆகியிருக்கிறேனா?’ என்கிற overall objective இருக்கணும். Focus இருக்கணும். அதற்கப்புறம் என்ன? If x comes to you asking for a help, you should check whether it tunes with your philosophy, mind’s agenda-அவ்வளவுதான். அதற்கு suitஆகற மாதிரி இருந்தால் helpபண்ணலாம். அதற்கு suitஆகாதுன்னா, if it will put your mind into more tension and turmoils-ன்னா அதை செய்யக் கூடாது.
நான் நிறைய பேருக்கு சொல்லியிருக்கிறேன். ஜாமீன் கையெழுத்து போடக் கூடாது. இது ரொம்ப பெரிய பிராப்ளம். தண்ணியிலே மூழ்கியவனை காப்பாற்றப் போய் இவனும் மூழ்கி போன மாதிரிதான் இது. இதிலே சுவாமி தயவிலே தப்பித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ImageI will tell you how to handle situations. Generally, human nature என்னவென்றால், to postpone the decision when it comes to closer people. பணம் என்று வருகிறபோது இந்த ஜனங்களுக்கு புத்தி கெட்டுப் போகிறது. யாருக்காவது postpone பண்ண முடியுமா, பணத்தை rotate பண்ண முடியுமா என்று இந்த மாதிரியெல்லாம் வந்துவிடும். பணம் நிறைய வந்தால் அந்த பணத்தின் பொருட்டு நெகடிவ் thoughts வந்துவிடும். அதனாலே நான் என்ன சொல்கிறேன்னா, ‘யாராவது உன்கிட்டே கடன் ஏதாவது வந்து கேட்டாங்கன்னா, நீ என்ன பண்ணணும் தெரியுமா? அவங்க உன்கிட்டே 5000 ரூபாய் கேட்டாங்கன்னா, நீ ஆயிரம் ரூபாய்தான் தரணும். நீ ஒன்றுமே கொடுக்காமல் இருப்பது நல்லது இல்லை. ஏன்னா உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. Help பண்ணலாம். ஆனால் நீ கடனாக கொடுக்கிற போது, அவன் கடனை திருப்பித் தரலையே என்று ஒரு hurt feeling உனக்கு வரும். உன்கிட்டே வந்தால் நீ கடனை கேட்பியே என்பதற்காக அவன் உன்கிட்டே வருவதையே நிறுத்திவிடுவான். Friendshipக்கு, friendshipம் போயிடும். கடனுக்கு கடனும் போயிடும். உனக்கு மனசு கஷ்டமும் வந்துவிடும்.

அதனாலே நீ என்ன நினைக்க வேண்டும்னா ‘இந்த பணம் என்னுடையது கிடையாது’ அப்படின்னு முதலிலேயே decide பண்ணிவிடணும். எங்க ஊர் பாஷையிலே ‘எள்ளுந் தண்ணியும் விட்டாச்சு’ன்னு சொல்றது. அதனாலே அவன் 5000 ரூபாய் கேட்டால், ‘என்னால் முடிந்தது 1000 ரூபாய் கொடுக்கிறேன். இதை நீ எனக்கு திருப்பிக் கொடுக்க வேண்டாம்’ என்று சொல்லிவிடு. அப்போ உனக்கும் பிராப்ளம் இல்லை, அவனுக்கும் பிராப்ளம் இல்லை. Understand, this is the way you should handle finance matters. இது இரண்டாவது solution நான் கொடுப்பது. இல்லைன்னா என்னிக்கு இருந்தாலும் இந்த பணம் கொடுக்கல் வாங்கலிலே நல்ல நல்ல friendship எல்லாம் கெட்டுப் போகும். இது தேவையில்லாத விஷயம்.

மூணாவது, நீ ஒரு பொறுப்பான பதவியிலே இருக்கிறாய். அந்தப் பதவியை வைச்சிக்கிட்டு உன்கிட்டே காரியம் சாதிக்க வேண்டும் என்று சில பேர் உன்கிட்டே வருவாங்க. இது ஒரு human nature. அதை நீ எப்படி handle பண்ண வேண்டும்? Influence நல்ல விஷயத்திற்கு கேட்கிறவனும் உண்டு, கெட்ட விஷயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள நினைப்பவனும் உண்டு. நீ என்ன செய்ய வேண்டும் என்றால், தர்மமாக எந்த உதவியை எல்லாம் கேட்கிறார்களோ அதையெல்லாம் செய்துவிட வேண்டும். எதெல்லாம் உன்னை வம்பிலே மாட்டிவிடுமோ அதையெல்லாம் நீ செய்யக் கூடாது. அப்போ, ஒரு ஆள், உன்கிட்டே 4 help கேட்டு வரான்னு வை. அதிலே ஒரு helpஐ genuine செய்துவிட்டு, அவன் கேட்ட மீதி 3 helpம் செய்யாமல் போனால் கூட அவனுக்கு உன்கிட்டே heart burn வராது. அப்போ நல்லதை செய்யறதுக்கு நீ வருத்தப்பட வேண்டியதே இல்லை. That is part of your duty. நீ தர்மம் என்று நினைத்து செய்யப் போவதைத் தானே அவனுக்கு செய்யப் போகிறாய். May be you are avoiding them for expediting the whole thing. இது ஒரு சின்ன உதாரணம்.

இந்த மாதிரி வாழ்க்கையில் ‘இப்படித்தான் இருக்க வேண்டும்’ என்கிற மாதிரியான சின்ன சின்ன விஷயங்கள் நமக்கு தெரிந்தால், பிறகு எந்த குழப்பமும் வராது.

About The Author