பாபா பதில்கள்-மரியாதை

கடவுள் நம்மை மகிமைப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் மகிமைப்படுத்துவான். நாம் மரியாதையை தேடக் கூடாது. கடவுளுக்கு நாம் நெருங்கியவர்களாக இருந்தால் நமக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதனால்தான் நான் எங்கள் பள்ளி பிள்ளைகளுக்கு சொல்லுவேன் Respect is something which is never demanded. மரியாதையை கேட்டு வாங்காதே Respect is something which is commanded.. அதற்குள்ள கட்டுப்பாடு இருக்க வேண்டும், அதற்குள்ள qualities இருக்க வேண்டும். அப்போ மரியாதை உன்னைத் தேடி வரும்.

நீ சும்மா அலட்டிக் கொண்டு ஏதாவது செய்தாய் என்றால், மற்றவர்கள் வெளியில் வேண்டுமானால் உனக்கு மரியாதை கொடுப்பார்கள்; ஆனால் உள்ளுக்குள் உன்னை கிண்டல் அடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்..

கடவுளுக்கு முன்னால் எல்லோரும் சமம். யார் பெரியவர்கள், யார் சிறியவர்கள்? நாம் அமைதியாக இருப்போம். கடவுள் நமக்கு என்ன அன்பு காட்ட வேண்டும் என்று நினைக்கிறானோ, காட்டுவான். அப்பர்சாமி நடராஜரை போய் பார்க்கிறார். அப்பர்சாமிக்கு மட்டும் அவர் தெரிகிறார். ‘என்று வந்தாய் எனும் திருக்குறிப்பே! எப்போ வந்தாய்?’ என்று கேட்கிற மாதிரி இருக்கிறதாம்.. அதுதான் என்ஜாய் பண்ண வேண்டிய விஷயம். நாம் நாமாக இருப்போம். சாமி நமக்கு என்ன கருணை செய்கிறாரோ அது தானாக கிடைக்கும். If we are close to God, we will definitely get the Love we deserve..

About The Author