பாபா பதில்கள் – யோகம்

யோகம்

யோகம் என்னவென்றால் அது ஜோக் (JOG) என்ற வார்த்தையில் இருந்து வெளி வந்தது. ஜோக் என்றால் சேர்ப்பது என்று அர்த்தம். எதை சேர்ப்பது? ஒரு நதியை கொண்டு போய் கடலில் சேர்க்கிற மாதிரி நம் ஜீவாத்மாவை பரமாத்மாவிடம் கொண்டு சேர்க்கிற அந்த activity தான் யோகம் என்பது.

So, யோகத்துக்கு 4 நிலை இருக்கு. முதலில் சரியை, அப்புறம் கிரியை, மூணாவது நிலையில் யோகம். அதை தாண்டறப்போ வருவது ஞானம். சரியை என்றால் எதிரே ஒரு பிள்ளையாரையோ, முருகரையோ வெச்சுண்டு அதுக்கு அபிஷேகம் பண்ணி, சந்தன பொட்டு வெச்சு, ஒரு பூ சாற்றி, கிண்ணத்தில் பாயசம் வெச்சு கும்பிடறோமே அது சரீரத்தினால் செய்கிற பூஜை அதுதான் சரியை.

வெளியில் அபிஷேகம் பண்றதையும் பூஜை பண்றதையும் விட்டு கண்ணை மூடிண்டு முருகா முருகா என்று ஏதோவொரு மந்திரம் சொல்றது. அந்த மாதிரி வரபோது அது கிரியை. கிரியை என்றால் to create energy என்று அர்த்தம். ஒரு சக்தியை உள்ளுக்குள்ளே சுரக்க வைப்பது. அதுதான் கிரியை.

முதலில் வெளியே பூஜை பண்ணுவே. அப்புறம் ஒரு கோயிலுக்குப் போய் சாமியை பார்க்கிறே. பார்த்துட்டு கும்பிடறது என்று வரச்சே உனக்கே தெரியாமல் கண்ணை மூடிக்கிறே பார். அதுதான் இரண்டாவது நிலை. பார்த்தது முதல் நிலை. சரியை. கும்பிடும் போது கண் மூடிடுது, உள்ளே பார்க்கிறது, அது கிரியை.

சரியை, கிரியை தாண்டி யோகம் வருது. அந்த யோகம் வரும் போது எதுவும் தெரியாத ஒரு அமைதியில் உட்கார்ந்து இருப்போம். நாம் பார்த்த காமாட்சியம்மாளோ காளிகாம்பாளோ கிடையாது. நாமும் கிடையாது. அப்படியே ஒரு யோகம் வந்துடும். அந்த நிலைதான் யோகம். இரண்டையும் இணைக்கிற பயிற்சி. அதைத் தாண்டி வந்தால் அதற்குப் பெயர் ஞானம்.

ஞானம் என்ன தெரியுமா? நானேதான் காமாட்சி அம்மா, நானேதான் முருகன் என்பது. இதுதான் சிவசங்கர் பாபா சொல்றார். ஜெனங்களுக்குப் புரியலை. சரியை, கிரியை, யோகத்தை தாண்டி நாலாவது நிலையில்தான் ஞானியாக முடியும். ஞானி என்பது என்ன வென்றால், முதலில் இருட்டாக இருந்தது. என்னடா இருட்டா இருக்கே என்று கொஞ்சம் லேசா ஜன்னலை திறக்கறது. ஜன்னலை திறந்து சூரியனுடைய வெளிச்சம் உள்ளே வந்தவுடனே நம்மை நாமே பார்த்துக்கலாம். நம்மை மாதிரியே உள்ளே ஒருத்தன் இருந்தா அவனையும் பார்த்துக்கலாம். சோபா செட், கண்ணாடி எல்லாம் ரூமுக்குள்ளே இருக்கும். அதையும் பார்க்கலாம். பிறகு இவ்வளவு நேரம் இருட்டாய் இருக்கிறது என்று நினைச்சுட்டு இருந்தோம். சூரியன் ஒளிக்கற்றை உள்ளே வந்ததும் இவ்வளவு விஷயம் தெரிஞ்சு போச்சு என்று ஜன்னல்கிட்ட எட்டிப் பார்க்கறது. பார்த்தா, பச்சையாக ஒரு புல்வெளி தெரியும். பறவைகள் பறந்துட்டு இருக்கும். விலங்குகள் அலைஞ்சுட்டு இருக்கும். ஆறு ஓடிட்டு இருக்கும். அப்பதான் உனக்கு தெரியும். அடடா. நான் இருட்டுல இருந்தேன். உள்ளே இவ்வளவு இருக்கு. வெளியே அதைவிட இருக்கே என்று புரியும். இதெல்லாம் படிநிலைகள்.

So, ஒரு மனிதன் நான் இருட்டில் இருக்கிறேன் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும். அதுக்கப்புறம் வெளிச்சத்தை நாட வேண்டும். வெளிச்சம் வந்ததும் தன்னை அறிந்துக் கொள்வான். தன்னை சுற்றி இருக்கிற வஸ்துக்களையும் புரிந்துக் கொள்வான். இதைத் தாண்டி போற போது உலகம் பூராவும் வெளிச்சம் இருக்கிறது என்று தெரிந்துவிடும். கடைசியில் ஒரே ஒரு கிளிக் வரும். எல்லாம் ஏற்கனவே இருந்துச்சு. நான்தான் இதெல்லாம் தெரியாத முட்டாளா இருந்தேன் என்று தெரியும்.

தெரிஞ்சுட்டு இதெல்லாம் உற்பத்தி பண்ணிப் பார்த்தவன், சொன்னவன், கண்டவன் யார்? தானேதான். அதனால்தான் தானே வெளிச்சம் என்று தெரிந்து கொள்வான். எல்லாம் இருந்தது. இவனுக்குப் புரியாமல் இருந்தது. இவனுக்குப் புரிந்த நிலை வர்ற போது தானே அந்த வெளிச்சம் என்று அறிந்து கொள்வான். இதுதான் ஞானி என்பது. எல்லாவற்றையும் புரிந்து கொள்கிற நிலை எதுவோ அது ஞானியோட லட்சணம்.

About The Author

2 Comments

 1. nandhitha

  வணக்கம்
  யோகம் என்பது யுஜ் என்ற தாதுவின் அடிப்படையில் பிறந்தது, யுஜ்யதே அனேன இதி யோக: என்பது விளக்கம், யுஜ், யுக் என்ற வேர்ச்சொல்லின் பிறப்புத்தான் YOKE என்ற ஆங்கிலச் சொல். யுஜ், யுக் என்பதற்கு இணைப்பது பிணைப்பது என்று பொருள்
  என்றும் மாறா அன்புடன்
  நந்திதா

 2. chocks

  யோகம் கருத்து விரிவு மிகவும் அருமை சொக்கு

Comments are closed.