பாபா பதில்கள்

Babaஸ்வாமி என்றால், நமக்கு உடைமையானவன் என்று அர்த்தம். We are all His properties. He is our Boss, He is our owner என்று அர்த்தம். நாம் எல்லோரும் ஜீவாத்மாக்கள். உலகத்திலே இருக்கிற எல்லோருமே பெண்கள் தான். கடவுள் ஒருத்தன் தான் ஆண். அதனாலே பரமாத்மா ஆண். ஜீவாத்மாக்கள் யாராக இருந்தாலும், whether they are in feminine gender or masculine gender, எல்லோருமே பெண்கள் தான்.

மீரா பிருந்தாவனத்திற்கு போனாள். அங்கே கோஸ்வாமி என்பவர், "பெண்கள் யாரும் இங்கே வரக் கூடாது என்று சொல்லு", என்று சொன்னார். அதற்கு மீரா, "கோஸ்வாமியிடம் போய் கிருஷ்ணரை தவிர வேறே யாராவது ஆண் இந்த உலகத்திலே இருக்கிறாரா என்று கேட்டுக் கொண்டு வா", என்று சொன்னாளாம். அவரும், "ஆமாம், ஆமாம். அவள் சொல்வது தான் கரெக்ட். வரச் சொல்லு", என்று சொன்னாராம்.

ஈசனுடைய திருவடி என்பது இணையடி நீழல். அதற்கு மேலே நிழலை கொடுக்கக் கூடிய விஷயம் வேறு ஒன்றுமே இல்லை. That can give the ultimate shelter.

About The Author