பாபா பதில்கள்

1. கடந்த காலம்…….Let go of the past, the past is past….

திரு. சிவ சங்கர் பாபா அவர்களின் உரையிலிருந்து,

நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும். பகவத்கீதையின் சாராம்சம் அதுதான். எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடந்து கொண்டிருக்கின்றதோ, அது நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது. இனி எது நடக்குமோ, அது நன்றாகவே நடக்கும். நீ என்ன கொண்டு வந்தாய் இழப்பதற்கு? அம்மா வயிற்றிலிருந்து தொப்புள் கொடியை கட்பண்ணிக் கொண்டு வரும்போது நாம் என்ன கொண்டு வந்தோம்? வெறும் கையோடுதான் வந்தோம். அதனால் நீ எதைக் கொண்டு போகப்போகிறாய், போகும் போது? வெறும் கையோடு வந்தாய், வெறும் கையோடு போவாய்.

இந்த பூமியிலே எதுவெல்லாம் நீ அனுபவித்தாயோ அது இந்த பூமியிலிருந்தே கொடுக்கப்பட்டது. காதற்ற ஊசியும் வாராது காணும் கடை வழிக்கே. அதனால், இந்த உலகத்தில் கடந்த காலத்தைப் பற்றி வருத்தப்படவே தேவையில்லை. Today was that tomorrow about which you were worrying yesterday. இன்று என்பது நீ நேற்று பயந்து கொண்டிருந்த நாளை. நாளையை நாளைக்குப் பார்த்துக்கலாம். Yesterday was a waste paper, today is a newspaper and tomorrow is a question paper. All these added together forms an answer paper.

2. நாவினாற் சுட்டவடு….Controlling your tongue….

திருவள்ளுவர் சொல்கிறார், யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல்லிழுக்க பட்டு. யாராகயிருந்தாலும் எதைக் காப்பாற்றாவிட்டாலும் நாக்கைக் காப்பாற்ற வேண்டும். சொல்லுகின்ற வார்த்தையை யோசித்து நல்லபடியாக சொல்ல வேண்டும். அப்படியில்லையென்றால், அவருக்கு சோகம் வரும். இன்னொரு இடத்தில், என்ன சொல்கிறார் என்றால், ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகாதாகி விடும். நீ நாற்பது வருஷம் நல்லவனாக இருந்திருப்பே, ஓரே ஒரு வார்த்தை loose talk பண்ணிவிட்டால், உன்னுடைய நாற்பது வருஷ நட்பு உடனே முடிவுக்கு வந்து விடும். இன்னொரு இடத்தில் சொல்கிறார். தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்டவடு. தீயினால் பட்ட புண்கூட ஆறிடும். நாவினால், ஒரு வார்த்தை சொல்லிவிட்டால், இப்படி சொல்லிட்டானே இப்படி சொல்லிட்டானே என்று எப்பவும் அது நிற்கும். யாகாவா ராயினும் நாகாக்க வேண்டும் என்பதையும், எவ்வளவுதான் நல்ல வார்த்தையிருந்தாலும், தப்பித்தவறி ஒரு கெட்ட வார்த்தையை உதிர்க்காததும், நாவினால் சுட்ட புண் என்றைக்கும் இருக்கும் என்பதையும் நாம் கருத்தில் கொண்டு நாகாக்க வேண்டும்.

About The Author