பாபா பதில்கள்

Q. குடும்பத்தில் எல்லோரும் பாபாவிடம் வராமல் ஒருவர் மட்டும் பாபாவிடம் வந்தால் எல்லோருக்கும் அதனுடைய பலன் கிடைக்குமா?

யார் சாப்பிடுகிறார்களோ அவர்களுக்குத் தான் வயிறு நிரம்பும். யார் படிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் knowledge கிடைக்கும். ஒரு குடும்பத்தில் எல்லோரும் ஜாலியாக எங்கேயோ சுற்றிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு நல்லது பண்ண முடியுமா? அவரவர் கர்மாவை அவரவர்கள் அனுபவிக்கிறார்கள்.

கர்மாவை அனுபவிப்பதற்காகத்தான் உலகத்தில் வருகிறான். அவன் படுகிற கஷ்ட நஷ்டமே அவனை திருத்துவதற்காகத் தான். அவன் திருந்த தயாராக இல்லை, நல்லது மட்டும் நடக்க வேண்டும் என்றால் அவன் எப்பொழுது தான் உருப்படப் போகிறான்?

ஆன்மீகத்தை பொறுத்த வரையில் யார் உயர நினைக்கிறார்களோ அவர்களுக்கு தான் பண்ண முடிகிறது. மற்றவர்களுக்கு பண்ண முடிவதில்லை. ஒரு வேளை உங்களுடைய prayersக்காக போனால் போகிறது என்று ஏதோ கொஞ்சம் பிச்சுப் போட்டால் உண்டு. நான் மட்டும் இல்லை, எந்த மகானும் பண்ண மாட்டான்.

About The Author