பாலக்கீரை தால்

தேவையான பொருட்கள்:

பாலக்கீரை – ஒரு பெரிய கட்டு
துவரம்பருப்பு (அ) பாசிப்பருப்பு (அ)மசூர்தால் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய தக்காளித் துண்டுகள் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயத்துண்டுகள் – ஒரு கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஆறு
உப்பு தேவையான அளவு
எலுமிச்சம்பழம் – ஒன்று
நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழை – ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் – ஒன்றரை தேக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி

செய்முறை:

பாலக் கீரையை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஏதாவது ஒரு பருப்பை
நன்கு கழுவிக் கொண்டு நறுக்கிய கீரை, பொடியாக நறுக்கிய வெங்காயத்துண்டுகள், தக்காளித்துண்டுகள், பச்சை மிளகாயுடன் சேர்த்து வேக வைக்கவும். பின் உப்பு சேர்த்து சற்று மசித்துக் கொண்டு அடுப்பில் வைத்துக் கொதித்தவுடன் இறக்கி வைத்து பொடியாக நறுக்கிய கொத்துமல்லித் தழையைத் தூவி எலுமிச்சை ரசத்தை சேர்த்துக் கலந்து பரிமாற புரதச்சத்து நிரம்பிய தால் தயார்.

About The Author

2 Comments

  1. ramani

    சமையல் தெரியாதவரும் நன்ராக கட்ருக்கொன்டு செய்யலாம்.மிகவும் நன்ராக இருன்தது.மிக்க நன்ரி.உங்கல் பணீ தொடர வாழ்துக்கல்.

Comments are closed.