பாலக் பனீர்

தேவையானப் பொருட்கள்:

பனீர் – 200 கிராம்
பசலைக் கீரை – ஒரு கட்டு
சாம்பார் வெங்காயம் – 5
தக்காளி சிறியது – 1
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

பனீரை சிறிய துண்டுகளாக வெட்டி நெய்யில் வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய பசலைக் கீரையை வதக்கி, அரைத்துக் கொள்ளுங்கள். அதே போல் சாம்பார் வெங்காயம், தக்காளியையும் வதக்கி, அரைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அரைத்த பசலைக் கீரை, வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கி, அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்துக் கலந்து நன்றாகக் கொதிக்க விடுங்கள்.

நன்றாகக் கொதித்த பிறகு நெய்யில் பொரித்த பனீர் துண்டுகளைப் போட்டு விடுங்கள்.
சுவையான பாலக் பனீர் தயார். இதை பரோட்டா, சப்பாத்தி போன்றவற்றுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்!

About The Author