பிரகடனம்

மைக்கேல் ஏஞ்சலோ
மரணவாசலை
அலங்கரிக்கப் போனவர்
மயங்கியோ மறந்தோ
திரும்பவே இல்லை.

ஏமாற்ற முற்ற
சரித்திர எழுதிகள்
எலும்புக் கூடுகளில்
ஏஞ்சலோவைத் தேடினர்.

விலாஎலும் பில்லாத
வெறும்கூடு
ஒன்றே ஒன்று
அகப்பட்டது என்று
அறிவித்தபோது
‘அதுதான் ஏஞ்சலோ’ என்று
பிகாசோ
பிரகடனஞ் செய்தார்!

About The Author