புரிந்ததும் புரியாததும்(1)

என் எண்பதாவது வயது :

காலத்திற்குக்
கடலா கிடைக்கவில்லை – அதன்
அலைகள் என்
முகத்தில்.

ஒற்றை அலையொன்றை
ஊரோரத்து
ஓடையில்
போட்டுவிட்டு வந்தேன்.

மூப்பு
ஓடிப்போனது அந்த
ஓடையை மொய்க்க.

நரை முடிகளை
எவரும் காணாதபடி
கரும்புக் காட்டில்
இறைத்து விட்டு வந்தேன்.

சாவு அங்கு
இனித்துப் பூத்துச்
சிரிக்கிறது வெள்ளையாய்.

About The Author