புளி அவல்

தேவையான பொருட்கள்:

அவல் – 1 கப்
புளி – சிறிய எலுமிச்சையளவு
வரமிளகாய் – 4 (அ) 5
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைகேற்ப
கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு – சிறிதளவு (தாளிப்புக்கு)
எண்ணெய் – 3 ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு

செய்முறை :

புளி கரைத்த நீரில் அவலை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வரமிளகாய் சேர்த்துத் தாளிக்கவும்.

பின்னர், புளி நீரில் ஊறிய அவலை வாணலியில் தாளிப்புடன் சேர்த்துக் கிளறவும். சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

10 நிமிடங்கள் கிளறிய பிறகு பெருங்காயம் சேர்த்து இறக்கவும்.

About The Author

1 Comment

  1. vyasamoorthy

    Aval in Hyderabad is very thin. You can not soak it in Pulithannir for more than 30-45 seconds! This is true even with the best quality available.

Comments are closed.