பூசணிக்காய் – கேரட் கூட்டு

தேவையானவை:

பூசணிக்காய் (நறுக்கியது) – ஒரு கோப்பை,
கேரட் (நறுக்கியது) – ½ கோப்பை,
துவரம்பருப்பு – ¼ கோப்பை,
கடலைப்பருப்பு – ¼ கோப்பை,
பாசிப்பருப்பு – ¼ கோப்பை,
பூண்டு – 4 பற்கள்,
தனியா – ¼ தேக்கரண்டி,
தேங்காய்த் துருவல் – ஒரு மேசைக்கரண்டி,
சீரகம் – ¼ தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் – 1,
பச்சை மிளகாய் – 2,
மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

எண்ணெய் – 1 தேக்கரண்டி,
கடுகு – ¼ தேக்கரண்டி,
கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை:

முதலில், மூன்று பருப்புகளையும், மஞ்சள்தூள், பூண்டு ஆகியவற்றுடன் ஒன்றாகச் சேர்த்து வேக வையுங்கள்.
அடுத்து பூசணிக்காய், கேரட் இரண்டையும் சேர்த்து ஒன்றாக வேக வைக்க வேண்டும்.
பிறகு, தனியா, சீரகம் இரண்டையும் வறுத்து, தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்க வேண்டும்.
காய்கறிக் கலவை வெந்ததும், அரைத்த விழுதையும், வெந்த பருப்புக்களையும், தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து, கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்குங்கள்.
சுவையான பூசணிக்காய் – கேரட் கூட்டு தயார்!

சுவைத்துப் பார்த்து, மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

About The Author