பெண்ணின் கீர்த்தி

காண்பதற்குச் சிறந்தது எது
மான் விழிகளையுடைய
மனம் விரும்பும் காதலியின்
மலர்ந்த முகம்

நுகர்வதற்கு மேலானது எது
அவளின் மூச்சு

கேட்பதற்கு மேன்மையானது எது
அவளின் பேச்சு

சுவைப்பதற்கு இனியது எது
அமிர்த ரஸம் நிறைந்த
அவளின் தளிர் இதழ்கள்

மனம் விரும்பி இணைவதற்கு
உத்தமமானது எது
அவளின் தேகம்

தியானிக்க முக்கியமானது எது
அவளின் புது இளமையும்
பேரழகும்.

(சமஸ்கிருத செய்யுட்களின் தமிழ் மொழியாக்கம்)
(பரத்ருஹரின் சுபாஷிதம் மின்னூலில் இருந்து)

About The Author