பேரீச்சம்பழ பர்பி

தேவையான பொருட்கள்

பேரீச்சம்பழம் – 400gms
கெட்டி பாலேடு – 4 மேசைக்கரண்டி
biscuits – 10
பாதாம் பருப்பு – 8
முந்திரிப்பருப்பு – 8
ஏலக்காய் – 2

செய்முறை

பேரீச்சம்பழங்களை, விதையை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து மிதமான சூட்டில் அதில் நறுக்கிய துண்டுகளைப் போட்டு அதன் மேல் கெட்டியான பாலேட்டைப் போட்டுக் கிளறவும். (பாலேடு குறைவாக இருந்தால் ஒரு கரண்டி பாலைச் சேர்த்துக் கொள்ளலாம்).

பேரீச்சம்பழங்கள் குழைந்து வரும் பொழுது அதில் பிஸ்கட்களை கட்டி இல்லாமல் நன்றாகப் பொடி செய்துபோடவும். மேலும் கிளறவும். அல்வா பதம் வரும் பொழுது மெலிதாக நறுக்கிய பாதாம் பருப்பையும், முந்திரிப்பருப்பையும், உலர்ந்த திராட்சையையும், ஏலப்பொடியையும் போட்டு கீழே இறக்கவும்.

கொஞ்சம் சூடு குறைந்தவுடன் ஒரு அலுமினியப் பாத்திரத்தில் மாற்றி, சமப்படுத்தி, குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விட்டு மூன்று அல்லது நான்கு மணி நேரம் கழித்து வெளியில் எடுத்து துண்டுகள் போடவும். மிகவும் சுவையாக இருக்கும். தேவையானால் சாப்பிடும் பொழுது மேல் பொடி செய்த பிஸ்கட் தூவலாம்.”

About The Author

1 Comment

  1. Mohammed Fazeel

    Hஐ, ஸுப்பர் ஆர்டிcஉஅல்ச். வெர்ய் fஇனெ. Tகன்க்ச்

Comments are closed.