மடை திறந்து… (19)

என்னப்பா, எல்லாரும் எல்லாமும் நலம்தானே? இங்கே எல்லாம் நலமே!

போன வாரம் எழுத முடியாமப் போனதுக்கு திருபவும் ஸாரி… ஆனா நேயம் குழுவில மடைதிறந்து பேசிட்டுதானிருக்கோம். நீங்களும் இணைஞ்சிக்கலாம்:

http://groups.google.com/group/neyam?pli=1

அடிப்படையில நம்மோட உணர்ச்சிபூர்வமான பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் நம்ம ஆற்றல் கட்டமைப்பில இருக்கற அடைப்புகள்தான்னு சொல்லுது ஆற்றல் மருத்துவம். நமக்கு திட உடல் இருக்கற மாதிரி கண்ணுக்குத் தெரியாத ஆற்றல் உடலும் இருக்கு. இந்த ஆற்றல் உடலைக் குணப்படுத்தினா திட உடல் சரியாயிடும்கறது ஆற்றல் மருத்துவத்தின் கோட்பாடு. இந்த வகை சிகிச்சை முறையில பல வகைகள் இருக்கு.

அதில ஒரு வகையான சிகிச்சை எப்படி வேலை செய்யுதுன்னு அடானா விளக்கறார் இங்கே:

http://www.youtube.com/user/ataanaloa

பலவிதமான எதிர்மறை உணர்வுகளுக்கு சிகிச்சையளிக்கிற வீடியோஸும் இந்த சுட்டில இருக்கு, எது உங்களுக்குத் தேவைன்னு தோணுதோ அதைப் பார்த்து சிகிச்சை பெற்றுக்கலாம். நான் அடிக்கடி இந்தத் தளத்துக்குப் போறதுண்டு.

7 ஆற்றல் மையங்கள் அல்லது சக்கரங்கள் மூலமா உடலைக் குணப்படுத்தற ரேய்கி போன்ற சிகிச்சை முறைகள் பிரபஞ்ச ஆற்றலை மனித ஆற்றல் உடலுக்குப் பாய்ச்சி சுகமளிப்பவை. எனக்கு இது நல்லா வேலை செஞ்சிருக்கு. ஒரு முறை ஒரு விரல் ஏதோ காரணத்தினால சுளுக்கிடுச்சு. எனக்கு அது சுளுக்குன்னே தெரியாம விரலைப் பயன்படுத்த முடியாம கஷ்டப்பட்டுட்டிருந்தேன். ஜம்புவோட உறவினர் பத்மினி ரேய்கி கிராண்ட் மாஸ்டர். அவங்ககிட்டே பேசிட்டிருக்கும்போது சும்மா இது பற்றி சொன்னேன்.

"நீங்க சாப்பிட்டுட்டே உங்க இடது கையை மட்டும் எங்கிட்டே கொடுங்க"ன்னு சொல்லி அவங்க உள்ளங்கைகளுக்கிடையிலே என் விரலை வச்சு ஒரு பத்து பதினைஞ்சு நிமிஷம் சுகமளிச்சாங்க. அவங்கதான் சொன்னாங்க "நீங்க பளு தூக்கும்போதுதான் உங்க விரலை சுளுக்கிக்கிட்டீங்க"ன்னு. பதினைஞ்சு நிமிஷத்துக்கப்பறம் சுளுக்கு போயே போச்ச்!

இந்த சிகிச்சை முறையை தூரத்திலேர்ந்தும் செய்யலாம். நேர்லதான் போன வாரம் ரொம்ப களைப்பா இருக்குன்னு நண்பர் ஒருத்தரை ரேய்கி அனுப்பச் சொன்னேன் – அவர் எப்போ சிகிச்சையை ஆரம்பிப்பார்னு எனக்குத் தெரியாது. ஆனா திடீர்னு உக்கார்ந்த படியே தூங்கிட்டேன். ஆழமான அமைதியான தூக்கம். எழுந்தப்பறம் நண்பர்கிட்டேர்ந்து வந்திருந்த மின்னஞ்சல் சொல்லுச்சு அவர் சிகிச்சை கொடுத்த நேரத்திலதான் நான் அப்படி தூங்கி இருக்கேன்னு.

உலகம் முழுசும் நிறைய ரேய்கி சுகவர்கள் இருக்காங்க. அதில பலர் இலவசமா சிகிச்சை தரவும் தயாரா இருக்காங்க. இணையத்தில தேடிப்பார்த்தீங்கன்னா விபரங்கள் கிடைக்கும். நிலாக் குடும்பத்தில இருக்கற விஷாலம் அம்மா ஒரு ரேய்கி சுகவர். அவங்க சென்னை அண்ணா நகர்ல ஒரு இலவச ரேய்கி கிளினிக் வாரம் ஒருமுறை நடத்தறாங்க.

நானும் ரேய்கில மூணு சான்றிதழ் வாங்கிருக்கேன். ஆனா பெரிசா பயன்படுத்தறதில்லை. எனக்கு என்னவோ மனிதர்களுக்குள்ளே இருக்கற ஆற்றலை அவங்களாவே வெளிக்கொண்டு வர உதவற உத்திகள் மேல அதிக விருப்பம். அப்படி ஒண்ணுதான் சுதந்திர உத்தி. நம்ம ஆற்றல் உடல்ல இருக்கற அடைப்புகளை மெரிடியன்களை மெல்லத் தட்டுதல் மூலமா இந்த உத்தி நீக்குது. நான் கத்துக்கிட்ட சுய உதவி உத்திகள்ல இது மிக முக்கியமான உத்தி. கத்துக்கறதும் ரொம்ப சுலபம்தான். இந்த உத்தியை விளக்கி பல மின்னூல்களும் வீடியோக்களும் இணையம் முழுவதும் நிறைஞ்சு கிடக்கு. சுதந்தர உத்தி பற்றிய முழுவிபரங்கள் அறிய இந்த தளத்துக்குப் போகலாம்:

http://www.eftuniverse.com/index.php?option=com_content&view=article&id=11&Itemid=14

இதைத் தமிழ்ல விளக்கி ஒரு வீடியோ செய்யணும்னு எனக்கு ஆசைதான். ஆனா நேரம் உள்ளிட்ட வசதிகள் இல்லையேப்பா… தவிர, இதெல்லாம் உங்களுக்கு பயன்படுதான்ன்னு கூட எனக்குத் தெரியலை. சுகம் செயல்முறை எத்தனை பேர் கத்துக்கிட்டீங்க, பயன்பட்டுச்சான்னு யாருமே சொல்லலையே…. இருந்தாலும் நான் என்பாட்டுக்கு எனக்கு முடிஞ்ச வரை எனக்குத் தெரிஞ்சதைப் பகிர்ந்துக்கறேன் – என்றைக்காவது ஒரு நாள் யாருக்காவது பயன்படலாம்கற நம்பிக்கையில.

நாம சௌகரியமா இல்லைங்கற விழிப்புணர்வு வந்துட்டால் அதை எப்படி சரி செய்யறந்துங்கறதுக்கான வழிமுறைகளை நாம தேடிக்கலாம் – அவ்வளவு தூரம் உதவி நிறைஞ்சு கிடக்கு. இந்த வாழ்கையை ஆனந்தமா வாழணும்கற விருப்பமும் கொஞ்சம் உறுதியும் இருந்தா போதும்.

ஒரு சுகவரா நான் பார்த்தவரைக்கும் நம்ம சமூகத்தில உணர்ச்சிகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தர்றதில்லை. ரொம்ப உணர்ச்சிபூர்வமான நாம ஏன் அப்படி நடந்துக்கறோம்கறதுதான் எனக்குப் புரியறதில்லை. உடம்புக்கு ஒண்ணுன்னா உடனே கவனிக்கறோம். ஆனா மனசுக்கு ஒண்ணுன்னா நேரமோ நிதியோ ஒதுக்க அவ்வளவு தயக்கம்! ஏன்? ஏன்? ஏன்?

அப்படியே நேரம் ஒதுக்கத் துணிஞ்சாலும் யாராவது எதையாவது செய்து என்னை சுகமாக்க மாட்டாங்களாங்கற ஒரு அவசரம் இருக்குமே ஒழிய, நானும் அதில பங்கெடுக்கணும்கற மனப்பாங்கு இருக்கறதில்லை.

நண்பர் ஒருத்தருக்கு எப்போதும் ஏதாவது பிரச்சனை. தீராத கவலை; வருத்தம். நான் பல மணிநேரம் அவருக்கு செலவு செய்து அவருக்கு பல உத்திகள் கத்துக் கொடுத்ததோட தினப்படி செய்ய வேண்டிய பயிற்சிகளும் கொடுத்திருந்தேன். அவர் அதை ஒரே ஒரு நாள் அரைகுறையா செஞ்சார். அவரோட மொத்த கவனமும் ஆவியுலகத்திலருந்து தன்னோட அன்றாடப் பிரச்சினைகள் தீர ஆலோசனை பெறுவதிலதானிருந்தது. அதில்லையே ஆவியுலகத் தொடர்போட நோக்கம்… அதனால அவர் இன்றைக்கு வரைக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வ்களில்லாம போராடிக்கிட்டுதானிருக்கார்.

முன்னால எல்லாம் என்கிட்ட வர்றவங்க எல்லாரும் எப்படியாவது சுகமாகியே தீரணும்கற கட்டாயம் என்கிட்டே இருக்கும். இப்போ அது எவ்வளவோ குறைஞ்சிருச்சு. அது அவங்கவங்களோட சொந்தத் தெரிவுங்கறது தெளிவாயிடுச்சு. அதனால சுகமளித்தல் பற்றி சொல்வேன், நினைவு படுத்துவேன், ஆனா வலியுறுத்த மாட்டேன் – எவ்வளவு நெருக்கமானவங்களா இருந்தாலும்.

எனக்கு நல்லா விளங்கிடுச்சு – நாம விருப்பப்படலைன்னா யாராலேயும் நம்மைக் குணப்படுத்த முடியாது – கடவுள் உட்பட. அவ்வளவு ஆற்றலும் சுதந்திரமும் நமக்கு இருக்கு. அதைப் பற்றி விளக்கமா இன்னொரு முறை பார்ப்போம்.

***

போன வாரம் பல மரணச் செய்திகள். இந்த மாதிரி துக்கத்தில இருக்கறவங்களுக்கு ஆறுதல் சொல்றது ரொம்ப கஷ்டம். ஆனா ஒண்ணுமே சொல்லாம கூட இருந்தாலே அது பெரிய விஷயம்தான். என்னோட மாமியார் இறந்திருந்தப்பா என் கணவர் துக்கத்தை மட்டுப்படுத்தறதுக்கு நண்பர்கள்கிட்டேருந்து நிறைய உதவி எடுத்துக்கிட்டேன். அவங்ககிட்டே பேசி அவருக்குக் கடிதம் எழுதச் சொன்னேன்; தொலை பேசச் சொன்னேன்; வீட்டுக்கு வந்து வெளில கூட்டிட்டுப் போகச் சொன்னேன். இதெல்லாமே அவருக்கு ரொம்ப ஆறுதலா இருந்தது. இதெல்லாம் நான் சொல்லி நண்பர்கள் செஞ்சதுன்னு அவருக்குத் தெரியாது. இதெல்லாம் நண்பர்கள் தானா செஞ்சிருந்தா நல்லாத்தானிருக்கும். ஆனா அவரவருக்கு அவரவர் வாழ்க்கை இருக்கே. இருந்தாலும் நான் சொன்னப்போ சந்தோஷமாச் செஞ்ச அத்தனை நண்பர்களுக்கும் நன்றி சொல்றேன். இதையெல்லாம் மற்றவங்க சொல்லாம நானே மற்றவங்களுக்குச் செய்யவும் முயற்சி செய்யறேன். நீங்களும் இதை மனசில வச்சுக்கிட்டு துக்கத்தில இருக்கறவங்க மேலே உங்களாலான கரிசனத்தைக் காட்டுங்க. முக்கியமா மேலை நாட்டில இருக்கறவங்களுக்கு இது ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன்.

ஒவ்வொருத்தரும் நெருக்கமானவங்களோட மறைவை வெவ்வேறுவிதமா எடுத்துப்பாங்க. ஒரு வருடத்துக்கும் மேலா தன் தகப்பனாரோட மறைவுக்காக துக்கமா இருந்த ஒரு நண்பருக்கு உதவ விருப்பப்பட்டு சுகமளிக்கும் உத்திகள் பற்றி சொன்னேன். ஆனா அவர், "நான் எங்கப்பாவை எப்பவும் நினைச்சிட்டிருக்கத்தான் விரும்பறேன். அதை மாற்ற நான் விரும்பலை. மாற்றவும் முடியாது"ன்னு ஒரு வைராக்கியத்தோட சொன்னார்.

நெருக்கமானவங்களை நாம மிஸ் பண்றது சகஜம்தான். ஆனா அதைக் கட்டாயமாக்கிக்க வேண்டிய அவசியம் இல்லைங்கறது என்னோட கருத்து. சில சமூகங்கள்ல இறந்தவங்க இறைவன்கிட்டே போறாங்கங்கறதால மரணத்தைக் கொண்டாடறாங்க. தவிர, பல சமயங்கள்ல ஆவியா வர்றவங்க சொல்றதெல்லாம் ‘மூவ் ஆன்’ – ‘நாங்க எங்க பயணத்தைத் தொடர நீங்க உங்க பயணத்தை நீங்க தொடர்றது வசதியா இருக்கும்’னு பலமுறை சொல்லி இருக்காங்க. அதனால துக்கத்தை நாம இறந்தவங்களுக்குச் செய்யற மரியாதையா நாம எடுத்துக்கறது சரியில்லைன்னு தோணுது. ஏன்னா அவங்களோட ஆன்ம வளர்ச்சிக்கு அது தடையாக இருக்கற மாதிரிதான் அவங்க சொல்றாங்க. எல்லாத்தையும் விட அதீத துக்கம் யாருக்கு என்ன பலனைத் தருது?

‘சொல்றது எளிது. செய்யறது கஷ்டம்’ ஒத்துக்கறேன். சிலபேருக்கு நான் சொல்றது தப்புன்னு கூடத் தோணலாம். ஆனா சில சமயம் மாற்றுக் கருத்துக்கள் ஒரு புதிய கதவைத் திறக்கும்கறதால சொல்லி வைக்கிறேன். குழந்தையை இழந்த அனுபவம் எனக்கு இருக்குங்கறது தெரிஞ்சா ஒரு வேளை நான் சொல்றதை உங்களுக்கு வேற கோணத்தில பார்க்க முடியுமோ என்னவோ! (உடனே எனக்காக சோக வயலினெல்லாம் வாசிக்காதீங்க. நான் இங்கேயும் என் மகன் ஆவியுலகத்திலும் நலமே!)

படத்தில நீங்க பார்க்கறது என் செல்லக் குட்டியோட கல்லறை. நான் கிறிஸ்தவரா என்று உங்களுக்கு ஆச்சரியமா இருக்கலாம். நான் பிறந்து வளர்ந்தது கிறிஸ்தவராக, கல்யாணம் செஞ்சது இந்துவை, உதவும் கரங்களில் ஆதரவு தர்ற குழந்தை முஸ்லிம். நான் இப்போ மதங்களைத் தாண்டி வளர்ந்துட்டேன்னு தைரியமா என்னால சொல்ல முடியுது. எல்லா வழிபாட்டுத் தலங்களுமே எனக்கு ஒரே மாதிரியாதான் தெரியுது. நிறைய தலங்கள்ல ஆழமான தியானத்துக்குப் போயிடுவேன் – கண்ணையே திறக்க முடியாதபடி, திறக்க விரும்பாதபடி – அப்படி ஒரு ஆழ்நிலை பிரபஞ்சத்தில இருக்கறது இல்லாதது எல்லாத்தையும் ஒண்ணாக்கிடுது.
முதல் முறையா இந்த முறை மடை திறந்து எழுதணுமேன்னு சலிப்பா இருந்தது. (ஆனா எழுத ஆரம்பிச்சதும் அதுவா ஓடுது) மனசுக்கு விருப்பமில்லாம செய்யறது எதுவும் ஆன்மாவுக்கு நல்லதில்லைங்கறது என்னோட நம்பிக்கை. அதனால தொடர்ச்சியா வாரவாரம் எழுதுவேனான்னு தெரியலை. ஒவ்வொரு வாரமும் இதயம் என்ன சொல்லுதோ அதைத்தான் செய்வேன். சரியா?

ஆனா நேயம் குழுவில தொடர்ந்து பேசுவோம்தானே!

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

7 Comments

 1. vijayaveni

  Vanakam Nila..Nalam nalam ariya aaval..:-)
  Please do not stop this madai thiranthu.:-)
  like me many people are reading this nilacharal website.i am intruducing this website to many of my friends.today also one of my friend called and told her problems.i asked her to read this madai thiranthu part.just now sent her this page url.
  am writing behalf the people who are all reading this nilacharl and not able to get touch with you by email or neyam.since as you know everybody will be busy in their life.but still all of us never mind to spend time to read this website.:-) Indha ulagathila vaazhara konja nalla namaku therincha,anupavicha nalla visyangalai mathavangakita information ah solrathu oru mahathana seyal.so please continue this..:-)
  We all born to do something good for world/others(after thanai arithal).if our duty is over god will take us with him..

 2. suhanya

  என்ன சொல்ல, மாற்றம்”என்ற சொல் தவிர எல்லாம் மாறும்.”

 3. mini

  Nila, eppadipa irukinga? romba sorry Nila. Ilappugal pathi neenga solli irupathu romba unmai. ovoratharukum athu marupadum enbathum unmai. Teacher amma mathiri irukinga intha photola. sila samayam varthaikal seiya mudiyathathai oru thodugai seithu vidum. vijayavani solvathu pola neyam vida MT la pesarathu special than. romba miss panen pona varam. intha varamum delay.

 4. கீதா

  புதிய புதிய அனுபவங்கள் பற்றியும், புதிய பல அணுகுமுறைகள் பற்றியும் சொல்கிறீர்கள். அவற்றையெல்லாம் புரிந்துகொள்ள இயலாத தொலைவில் நான்! ஆயினும் தொடர்வேன். புரியும் காலம் விரைவில் வரக்கூடும். தொடர்ந்து மடைதிறந்து வெள்ளம் பாயட்டும், நிலா.

 5. Mamallan

  MT is my favorite columns in Nilacharal. Hope you will be able to continue. Bit of a wait this week !.
  Sorry, Upsetting to read about the loss of your son. You have the blessing of this universe.

 6. Mahi

  நிலா,நான் மடைதிறந்து பேசாவிட்டாலும், நீங்க மடை திறந்து..” பேசுவதைத் தவறாமல் படிக்கிறேன். 🙂

  நீங்கள் கடந்து வந்ததை இப்போ காமெடியா சொல்லிட்டீங்க,ஆனால் உங்கள் இழப்பு அதிர்ச்சியும் வருத்தமும் அளித்தது. எல்லாம் கடவுள் சித்தம்.

 7. suhanya

  என்ன தலையைங்கம் இல்லாமல் ஒரு இதழா…………………

Comments are closed.