மடை திறந்து… (30)

என்னப்பா, வாழ்க்கை எப்படிப் போகுது? இங்கு அனைத்தும் நலமே!

வெள்ளிக்கிழமை 11/11/11 ஆன்மிக ரீதில ஒரு முக்கியமான நாள்னு சொல்றாங்க – மனித இனம் தன்னைத் தானே உணர்ற பயணத்தில இது ஒரு முக்கியமான மைல் கல்லாம். பல இடங்கள்ல பலவிதமான சந்திப்புகள், சடங்குகள் இருந்தன உலகம் முழுவதுமே! நானும் ஒரு விழாவில கலந்துக்கிட்டு கண்ணீர் விட்டேன் (இது புதுசா என்ன?)

இந்த ஆன்மீக விழாவில இன்னும் பலவிதமான சுகமாக்கும் உத்திகளைப் பற்றித் தெரிஞ்சிக்கிட்டேன். நாலுவிதமான சுகவர்கள்கிட்டேர்ந்து சுகம் பெற்றேன். ஆனா அன்னிக்கு சரியான தூக்கமே இல்லை. மூச்சுத் திணறல் வேறே… முதல்ல கோபமா வந்தது. அப்பறம் யோசிச்சுப் பார்த்தா இது ஹீலிங் க்ரைஸிஸ்னு புரிஞ்சது. செல்கள்ல பதிஞ்சிருந்த எதிர்மறை ஆற்றல் எல்லாம் வெளிப்பட்டு விலகுதுன்னு புரிஞ்சதும் அமைதியாயிட்டேன். பாருங்க… அடுத்த நாள் அருமையான தூக்கம்… இந்த நாலு விதமான உத்திகள்ல ஒண்ணைத் தேர்ந்தெடுத்து பயிற்சி பெறலாம்னு நினைச்சிருக்கேன்.

வழக்கம் போல குட்டி குட்டி புத்தர் மற்றும் பிள்ளையார் சிலைகள் வாங்கினேன் அங்கே… எங்கிட்டே இப்போ 18 பிள்ளையார் சிலைகளும் 10 புத்தர் சிலைகளும் இருக்கு. எப்போவாவது அதெல்லாத்தையும் படம் பிடிச்சுப் போடறேன். எனக்குப் பிள்ளையாரைப் பார்த்தா ஜாலியா இருக்கும். புத்தரைப் பார்த்தா ஒரு ஆழமான அமைதி வரும்.

ரெண்டு வருஷத்துக்கு முன்னால நான் பிரபஞ்சத்துக்கு எழுதி வச்ச கோரிக்கைகளைப் படிச்சிட்டிருந்தேன். முக்கால்வாசி நிறைவேறினதைப் பார்த்து ஆச்சரியமாயிருந்தது. அதில முக்கியமானது எடை குறைப்பு.

நான் எழுதி வச்சிருந்ததைவிட குறைஞ்சிட்டேன். இந்த முறை இந்தியா போயிருந்தப்போ நிறைய பாராட்டு கிடைச்சது. எனக்கு உகந்த யோகாவை அறிமுகப் படுத்தின பிரபஞ்சத்துக்கு நன்றி. திபெத்தியன் ரைட்ஸ் எனப்படும் அந்த யோகாவைப் பயில விரும்பினீங்கனா இங்கே போங்க:

http://www.mkprojects.com/pf_TibetanRites.htm

இந்த யோகா இளமையாக தோற்றமளிக்கவும் உதவுமாம் (அதான் நான் இப்பவும் 5 வயது பாப்பாவாவே இருக்கேன்.)

நீங்கள் எப்படிப்பட்டவர், உங்களுக்கு எப்படிப்பட்ட பணி உகந்தது போன்ற விபரங்களைத் தெரிஞ்சுக்கறதுக்கு நீங்க ப்ரிக்ஸ் – மையர்ஸ் டெஸ்ட் எடுக்கலாம்:

http://www.humanmetrics.com/cgi-win/jtypes2.asp

எனக்கு உகந்த பணி கவுன்சலிங்னு சொல்லுது இந்த டெஸ்ட். காந்தி, ஷேக்ஸ்பியர் போன்றவங்களும் என்னோட பெர்ஸனாலிடி டைப்தான்… அந்த வகையோட மொத்த விபரம் இங்கே:

http://www.keirsey.com/4temps/counselor.aspx

நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன். இங்கேயோ நேயத்திலேயோ பகிர்ந்துக்கங்க:

http://groups.google.com/group/neyam

என் தங்கை பெனிட்டா (படத்தில்) எனக்கு The Laws of The Spirit World என்ற புத்தகத்தைப் பரிசா தந்தா. கொர்ஷெட் என்கிற பெண்மணி தன்னோட இரு மகன்களைக் கார்விபத்தில பறிகொடுத்துட்டாங்க. ரட்டூ, விஸ்பி என்கிற இந்த இரு மகன்களும் ஆவி உலகத்திலருந்து அந்த உலகத்தைப் பற்றி தன் தாய் மூலமா எழுதினதுதான் இந்தப் புத்தகம். ‘ஆட்டோமாடிக் ரைட்டிங்’ என்கிற உத்தி மூலமா இது எழுதப்பட்டது. அதாவது மீடியம் காகிதத்து மேல எழுதுகோலை மென்மையா பிடிச்சுப்பாங்க. ஆவியுலக ஆற்றல் அவங்க ஊடா பாய்ஞ்சு எழுதுகோலை நகர்த்தும்.

இந்த நூல்ல ஆவியுலகம் எப்படிப்பட்டது, அதில் எத்தனை நிலைகள், அதன் விதிகள் என்ன போன்ற விபரங்கள் இருக்கு. இதில இருந்த விபரங்கள் என் மனசுக்கு ஒத்துப் போகலை. இது போல மேலும் சில நூல்கள் இருக்கு. சில சமயம் தகவல்கள் ஒண்ணுக்கொண்ணு முரணா கூட இருக்கு. அதனால எனக்கு இந்த நிமிஷம் எது சரின்னு படுதோ அதை நான் எடுத்துக்கறேன். இந்தக் கருத்து அடுத்த நிமிஷமே மாறலாம்கறதுலயும் நான் தெளிவா இருக்கேன்.

படத்தில நான் கட்டிருக்கற புடவையை மெட்டீரியலுக்காக வாங்கினேன். பின்ன டிசைன் பிடிக்காம ரெண்டு வருஷம் கட்டாம வச்சிருந்தேன். ஆனா அது நிலாச்சாரல்ல வரணும்னு இருந்திருக்கு. இந்தப் படத்தைப் பார்த்துட்டு நானும் பெனிட்டாவும் இரட்டையர்களான்னு நிறையப் பேர் ஃபேஸ்புக்ல கேட்டிருந்தாங்க. இது கொஞ்சம் ஓவரா இல்லை? பெனிட்டா என்னோட சித்தப்பா பொண்ணு. என்னைவிட அஞ்சாறு வயசு சின்னவ. ரெண்டு பேருக்கும் அலைவரிசை நல்லா ஒத்துப் போகும்.
வேறென்னப்பா? ஆங்… ஹேமா, எப்போவாவது நான் பாடின சிடி வரும். அப்போ என் பாட்டைக் கேட்கலாம்…. (எல்லாம் காலக் கொடுமை )

அடுத்த வாரம் பார்க்கலாமா?

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

4 Comments

 1. Mamallan

  careers suggested by Jung Career indicator for me – Child day care, Social work, Customer Services & Computer programmer. Jimmy Carter has similar profile !

 2. யாகவா

  // இந்தப் படத்தைப் பார்த்துட்டு நானும் பெனிட்டாவும் இரட்டையர்களான்னு நிறையப் பேர் ஃபேஸ்புக்ல கேட்டிருந்தாங்க. இது கொஞ்சம் ஓவரா இல்லை? //
  நான் கூட அப்படித்தாங்க நெனச்சேன், அப்புறமா நல்லா பார்த்தவுடன்தான் இல்லைங்கிறது தெரின்ஜிக்கிட்டேன்.

 3. k s santhi

  thank u for your experience on 11.11.11.but u didnt give where n when u had participated in that anmeega function.please tell me the place

 4. Hema

  //ஆங்… ஹேமா, எப்போவாவது நான் பாடின சிடி வரும். அப்போ என் பாட்டைக் கேட்கலாம்…//

  பாட்டு CD ஒரு காப்பி ப்ளீஸ்….முன்பதிவு இப்போதே!

Comments are closed.