மடை திறந்து… (33)

என்னப்பா, எல்லாமும் எல்லாரும் நலம்தானே!

ஞானசம்பந்தம் தவிர எல்லாரும் இந்த வாரம் அமைதி காத்ததுக்கு நன்றி  இங்கே யாரும் பேச மாட்டேங்கறீங்க… ஆனா முகநூலைத் திறந்த உடனே அரட்டைக்கு யாராவது தயாரா இருக்காங்க. நான் வேலை மும்மரத்தில கவனிக்கலைன்னா உடனே மக்களுக்கு அவங்களை உதாசீனப்படுத்தறேன்னு கோபம் வந்திடுது. பதில் சொன்னா, "நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க? ஏன் எங்கிட்ட பேசவே மாட்டேங்கறீங்க?" போன்ற உருப்படியில்லாத கேள்விகள்தான் நிறைய…

ஒரு பக்கம் இப்படி இருக்க, ஒரு தோழி, "எங்க வாழ்க்கையில கிடைச்ச மிகப்பெரிய கொடை நீங்கதான்" னு ரெண்டு நாள் முன்னால சொன்னப்ப பேச்சற்றுப் போயிட்டேன். எவ்வளவு பெரிய வார்த்தை இது! சொல்லப் போனா இதை என்னோட வாழ்க்கைக்குக் கிடைச்ச மிகப்பெரிய அங்கீகாரமா என்னோட ஈகோ நினைக்குது. ஆனா உள்ளே இருக்கற கடவுள், இன்னும் எவ்வளவு அறியாமைன்னு என்னோட ஈகோவைப் பார்த்து பரிதாபப் படறார்! கடவுள் பாதி, மிருகம் பாதியா என்னோட வாழ்க்கை எப்பவும் போல ஓடுது.

எப்படி இருப்பினும், இவ்வளவு பெரிய வார்த்தை சொல்ல பெரிய மனம் வேணுமில்லையா…. அந்த அற்புதமான மன அதிர்வு என்னைப் போல இன்னும் பலரோட அறியாமை இருளை நீக்க உதவும்… எனவே, அவருக்கு நன்றிகள் பல.

நான் கத்துக்கிட்ட ஒரு சுகமளிக்கும் உத்தியை (Access Consciousness) ஒருத்தர் மேல பயன்படுத்தினா அது 350,000 பேரோட அறியாமையை துளியாவது குறைக்கும்னு சொன்னாங்க. அந்த உத்தியை பயன்படுத்தினா எனக்கு ஒரு பவர் வாஷ் பண்ணின உணர்ச்சி இருக்கும். எல்லாமே இருக்கற ஒரு நிறைவு கிடைக்கும். போன ஞாயிறு காலைல எனக்கு நானே சுகமளிச்சப்பறம் நிறைய நேரமும் ஆற்றலும் இருக்கற மாதிரி இருந்துச்சு. சுத்தி சுத்தி எதையாவது சுத்தப்படுத்திட்டே இருந்தேன்.
திங்கட்கிழமை வேலைக்குப் போக ஆரம்பிச்சதும் இதெல்லாம் போயே போச்சுங்கறது நான் போகவேண்டிய தூரம் நிறையங்கறதைத் தெளிவா சொல்லுச்சு. (ஆனா முன்னைக்கு இப்போ எவ்வளவு பரவாயில்லைங்கறதை ஒத்துக்கிட்டுதான் ஆகணும்)

நான் சமீபத்தில கத்துக்கிட்ட ஒன்னஸ் ப்ள்ஸ்ஸிங் ரெண்டு வாரம் முன்னால ஒரு மனிதருக்குக் கொடுத்தேன். எதிர்பார்க்காத விதத்தில எதிர்பார்க்காத அளவு பெரிய வருமானம் வந்ததா அவர் இந்த வாரம் சொன்னார்.

மேலே சொன்ன இந்த ரெண்டு உத்தியோட இன்னொரு உத்தியும் சேர்த்து ஒரு பெண்மணிக்கு சுகமளிச்சேன். ஆனா அவங்ககிட்டே பெரிய மாறுதல்கள் இல்லை. இதனால இந்த உத்திகள் சரியில்லைன்னு அர்த்தமில்லை. அவங்க எவ்வளவு தூரம் சுகத்தை உள்வாங்கிக்கத் தயாரா இருக்காங்களோ அதைப் பொறுத்து பலன் மாறுபடும்.

இனியாங்க (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அந்தப் பெண்மணிக்குப் பிரச்சினை நீண்டகாலமா இருக்கு. சில வருஷங்களுக்கு முன்னால அவங்களுக்கு முதல் முறையா நான் சிகிச்சை அளிச்சப்போவும் பலனில்லைன்னுதான் சொன்னாங்க. ஆனா பல முறை தொடர்ந்து சுகமளிச்சப்பறம் இடையில சில காலம் நல்லா இருந்தாங்க. வேலைக்குப் போறதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணினாங்க. சுகம் பெறுவதை நிறுத்தினப்பறம் திரும்பவும் மன அழுத்தம் வந்திடுச்சு. அவங்களுக்குத் தேவை தொடர் சிகிச்சை. அவங்களுடைய ஆற்றலை அவங்க ஓரளவு உணர்ற நிலை வந்தப்பறம் தன்னாலேயே அவங்க வலுப்பட ஆரம்பிப்பாங்க. அந்த நிலை வர அவங்களுக்கு அடுத்தவங்களோட பலம் தேவையா இருக்கு. நான் கொடுக்கற பயிற்சிகளை செய்யற மனநிலையில கூட அவங்க இல்லை. தொடர் சிகிச்சைகளைத் தொடரவும் ஏதுவான சூழ்நிலை இல்லை. அதனால நான் அவங்களோட குடும்பத்தினரை சிகிச்சை எடுத்துக்கச் சொல்லி இருக்கேன். அவங்க குடும்பத்தினரோட ஒளி பிரகாசமா இருக்கும்போது இனியாவுக்குள்ள இருக்கற இருள் மறைஞ்சு போயிடும்கறது என்னோட கண்ணோட்டம்.

ஒரு சூழலை நாம சரி செய்யணும்னு நினைக்கிறது நம்மோட அசௌகர்யத்தைப் போக்கத்தானே? சூழல்ல நிறையப் பேர் சம்பந்தப்பட்டிருந்தா அத்தனை பேரையும் செப்பனிடறது சரியா வருமா? வெளி சூழல்கள் நம்மோட உள்ளுலகின் வெளிப்பாடுதான். உள்ளே குழப்பம் இருந்தா வெளிலேயும் இருக்கும். உள்ளே நம்ம மேலே நமக்கு வெறுப்பு இருந்தா வெளிலேயும் அது எதிரொலிக்கும். அதனால சுகம் நம்ம ஒவ்வொருத்தர்கிட்டேர்ந்தும்தான் ஆரம்பிக்குதுங்கறதைப் புரிஞ்சுக்கறது முக்கியம்.

உங்களுக்குப் பிடிக்காத ஒரு மனிதரோட எந்தப் பண்பு உங்களை அதிகம் பாதிக்குதோ அது உங்களுக்குள்ளே இருக்கான்னு கேள்வி கேட்டுப் பாருங்க…நேர்மையான பதில் உங்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம்.

வெளி உறவுகள் நமமோடான நம் உறவின் பிரதிபலிப்புங்கறதை அழகா விளக்கி அதை சுமுகமாக்கறதுக்கான உத்திகளையும் இந்த இலவச மின்னூல் தருது (ஆங்கிலம்). விருப்பமிருந்தா பாருங்க:

http://www.scribd.com/doc/63100932/eBook-KeysTo-Reltaionship-Beyond-Boundaries

முழுசா படிக்க விரும்பாதவங்களுக்காக ஒரு சின்ன உத்தி இங்கே…

எப்போல்லாம் இறுக்கமான உணர்வுகள் மனசில நிலவுதோ அப்பல்லாம் ‘இந்தக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் அனைத்தையும் அழித்தொழிக்கத் தயாராக இருக்கிறேன்’ அப்படின்னு சொல்லிட்டு கீழே இருக்கற வாக்கியத்தைச் சொல்லுங்க:

Right,Wrong, Good, Bad, POC, POD, All 9, Shorts, Boys and Beyonds

இந்த வாக்கியம் அர்த்தமில்லாம இருக்கறதா தெரிஞ்சா கூட சொல்லிப் பாருங்க… மனசு லேசாகறதை உணர்வீங்க. இந்த வாக்கியத்தோட முழு அர்த்தமும் பின்னணியும் இந்த சுட்டில இருக்கு:

http://bartsharp.com/transforming-your-limitations-to-personal-power/what-is-access-energy-transformation-and-the-clearing-statement/

மங்காத்தா பார்த்தேங்க…. பரவாயில்லை. ஆனா டூ மச் வயலன்ஸ். எப்போப் பார்த்தாலும் யாராவது யாரையாவது சுட்டுக்கிட்டே இருக்காங்க… வழக்கமா வெங்கட் பிரபு படத்தில இருக்கற நகைச்சுவையும் மிஸ்ஸிங். உங்களுக்குத் தெரியும்தானே எனக்கு நகைச்சுவைன்னா ரொம்பப் பிடிக்கும்னு… எனக்கு ரொம்பப் பிடிச்ச நகைச்சுவை நடிகர் கவுண்ட மணி. அதுக்கப்பறம் கமல்… மைக்கேல் மதன காமராஜன்ல காமுவா பின்னிருப்பாரே… அவரோட சதி லீலாவதி பெர்ஃபான்ஸ் சூபர்ப். பஞ்சதந்திரம் முழு நீள காமெடிப் படமானாலும் அதில அவருக்கு வாய்ப்பு கம்மி. அந்தப் படத்தோட ஹீரோக்கள் திரைக்கதையாசிரியரும், வசனகர்த்தாவும்தான். இப்படியான படங்கள் பார்க்க ஏக்கமா இருக்கு… யாராவது எடுங்களேம்பா…
‘நீங்க சுகவர்னு சொல்றீங்க, அப்படினா என்ன? நல்லா இருக்கு, புரியற மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு. எனக்கு இதை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா?’ன்னு ஒரு வாசகி கேட்டிருந்தாங்க. இதே கேள்வியைக் கொஞ்ச நாள் முன்னால குமார் கேட்டிருந்தார்னு அவருக்கு பதில் தந்திருந்தேன்… ஆனாலும் அதுக்குப் பின்னால இணைஞ்ச வாசகர்களுக்காக கொஞ்சம் வித்தியாசமான கோணத்தில பதில் சொல்லலாம்:

உடல் நலத்தைப் பேணறவங்க மருத்துவர்கள்னா, ஆன்ம நலத்தைப் பேணறவங்களை சுகவர்கள்னு சொல்லலாம். ஆன்ம நலம் நல்லா இருந்தா வாழ்க்கை ஈஸியா, சுகமா தெரியும் – வெளியுலகத்தில என்ன நடந்தாலும்…

வேற கேள்விகள் ஏதாவது இருந்தா கீழ்க்கண்ட வழிகள்ல என்னைத் தொடர்பு கொள்ளலாம்:

நிலா.எல்எல்ஜே@ஜிமெயில்.காம்
http://www.facebook.com/profile.php?id=720120663#!/profile.php?id=720120663
http://groups.google.com/group/neyam

அடுத்த வாரம் பார்க்கற வரைக்கும் வாழ்க்கையை சுகிச்சு வாழுங்க, சரியா?

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author