மடை திறந்து… (37)

என்னப்பா, புத்தாண்டு துவக்கம் நல்லா இருக்கா? 2012 புதுசா ஏதாவது கொண்டு வந்திருக்கா உங்களுக்கு?

ஹேமா ஆன்மான்னா என்ன ஆவின்னா என்னன்னு கேட்டிருந்தாங்க. ஒவ்வொருத்தரோட விளக்கமும் வெவ்வேற மாதிரி இருக்கு. நான் ஆவியும் ஆன்மாவும் ஒண்ணுன்னுதான் நினைச்சிட்டிருந்தேன். சமீபத்தில படிச்ச நூல் கொஞ்சம் வேறுபடுத்தி சொல்லி இருந்தது. ஆன்மாவும் ஆவியும் நாணயத்தின் இருமுகங்கள் போலன்னு சொல்ற இந்த நூல், ஆன்மா நமது இருப்பின் ஆதாரம்னா ஆவி நமது இருப்பின் அசைவுன்னு விளக்கம் தருது. அதாவது ‘ஆண்டவன் நினைக்கறான்… அருணாச்சலம் செய்யறான்’ங்கறதுல ஆன்மா ஆண்டவன் மாதிரி; ஆவி அருணாச்சலம் மாதிரி.

இந்த நூல்ல கொடுத்திருந்த உவமை எளிமையா புரிஞ்சிக்கற மாதிரி இருந்தது. ஆன்மாங்கறது ஒரு முத்துமாலை போல. அதில இருக்கற ஒவ்வொரு முத்தும் ஒரு பிறப்பு. இந்த பிறவி எடுக்கறது ஆவி.

இது ஒரு விளக்கம், அவ்வளவே. இதுதான் நியதியாக இருக்கணும்னு அவசியமில்லை. இந்த விளக்கம் உங்களுக்குத் தெளிவு தந்தா எடுத்துக்கலாம். குழப்பம் ஏற்படுத்தினா விட்டுடலாம்.

முகநூல்ல, ‘இன்னொரு புது சுகமளிக்கும் உத்தி கத்துக்கிட்டேன்’னு போட்டிருந்தப்போ ரெண்டு நண்பர்கள் ‘பல சமயம் நீ என்ன பேசறன்னே புரிய மாட்டேங்குது. ஆனா நீ எஞ்சாய் பண்ணினா சரிதான்’னு சொன்னாங்க. முன்னொரு முறை கீதாவும் இதே போல ஒரு முறை சொல்லிருந்தாங்க. ஒரு வகைல பார்த்தா புரியாத வரைக்கும் சந்தோஷம். ஏன்னா உங்களுக்கு சுகம் பெறத் தேவை இருக்கலை. தேவை இருந்தாதானே பரிகாரம் தேவைப்படும்? அதனால புரியாதவங்களுக்கு அந்தத் தேவை வரக்கூடாதுன்னு பிரார்த்திக்கறேன். அதேசமயம், அந்தத் தேவை இருந்தா அது தெரியாம இருக்கக்கூடாதுன்னும் வேண்டிக்கறேன்.

சில வருடங்களுக்கு முன்னால ஆங்கிலத்தில வலைப்பதிவு எழுதிட்டிருந்தேன். அதைத் திரும்பவும் தொடங்கலாமான்னு எண்ணம் எழுந்திருக்கு. அதை ஆரம்பிச்சா மடைதிறந்து எழுத முடியாது. பதிலுக்காக வெயிட்டிங். பதில் மேலேர்ந்து வருமா உள்ளேர்ந்து வருமான்னு தெரியலை. எல்லாமே ஒண்ணுதாங்கறப்போ மேலே, கீழே, உள்ளே, வெளியேன்னு என்ன பிரிவினை? எங்கேர்ந்தாவது வந்தா சரிதான். எனக்கென்னவோ வெள்ளம் ஆங்கிலத்தில பாயறதுக்கான வாய்ப்பு அதிகம் இருக்கறமாதிரிதான் தெரியுதுப்பா…

நான் புதுசா ஒரு உத்தி கத்துக்கிட்டேன்னு சொன்னேனில்லையா. அதுக்குப் பேரு ‘The healing codes’. இந்த உத்தி குணப்படுத்த முடியாத நோய்களை எல்லாம் குணப்படுத்தி இருக்கறதா மக்கள் சொல்றாங்க. விரும்பினா நீங்களும் கத்துக்கிட்டு செயல்படுத்திப் பாருங்க:

http://www.youtube.com/watch?v=ChH1zpVqoiI

இந்த உத்தி பற்றி விபரமா தெரிஞ்சிக்க விரும்பினீங்கன்னா இந்த நூலை வாங்கிப் படிக்கலாம்:

The healing codes by Alexander Loyd and Ben Johnson.

நான் முன்னாலேயே உங்களுக்கு க்ரையான் பற்றி சொல்லி இருக்கேன், ஞாபகம் இருக்கா? லீ கேரல்ங்கற பொறியியலாளர் மூலமா க்ரையான்னு நாம அழைக்கற ஒரு ஆற்றல் மனித குலத்துக்கு வழி காட்டுது. எனக்கு முதன் முதல் க்ரையானோட போதனைகளைப் படிச்சப்போ ரொம்ப விநோதமா இருந்தது. புரியவும் இல்லை; புரிஞ்சாலும் ஏத்துக்க முடியலை. ஆனா போகப் போக இந்த போதனைகள் எனக்கு புதுப்புது பரிமாணங்களைக் காட்டினதோட என்னோட ஆற்றலையும் உணர வச்சது. அநேகமா ஒவ்வொரு முறை க்ரையானோட சொற்பொழிவைக் கேட்கும்போதும் என் கண்ணிலருந்து தண்ணி கொட்டும். ஏன், எதுக்குன்னு தெரியாது – ஆழமா எங்கேயோ நீந்திப் போய் ஆன்மாவைத் தொட்டுட்டு வந்தது போல ஒரு உணர்விருக்கும். அமேஸிங்! சொல்லி விளக்க முடியாது. அனுபவிச்சுதான் பார்க்கணும்.

டோலே சொல்வார், ‘போதனையோ சொற்பொழிவோ வெறும் வார்த்தைகள் மட்டுமில்லை. அந்த வார்த்தைகள் பொதிச்சு வச்சிருக்கற ஆற்றலும்தான். அதனாலதான் ஒரே வார்த்தைகள் ஒவ்வொரு முறைமும் வெவ்வேறு அர்த்தத்தைக் கொடுக்கின்றன’ன்னு. அது முற்றிலும் உண்மைங்கறதை பல முறை நான் அனுபவிச்சிருக்கேன். டோலேவோட ஒரே சொற்பொழிவை பலமுறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விதமான அனுபவம் கிடைச்சிருக்கு. அவரோட அதே வார்த்தைகளை வேறொருத்தர் சொன்னா முற்றிலும் மாறுபட்ட அனுபவம். வார்த்தைகளைச் சொல்றவங்க எந்த மனநிலைல, எப்படிப்பட்ட விழிப்புணர்வோட இருக்காங்கறதுலதான் போதனையின் சாரம் இருக்குங்கறது என்னோட எண்ணம்.
ஒருதலைக் காதல் பற்றிய டோலேயோட ஒரு சொற்பொழிவு இங்கே:

http://www.youtube.com/watch?v=V3miuaOWsj8

க்ரையானோட சொற்பொழிவுகள் இங்கே:

https://www.kryon.com/k_freeaudio.html

உங்களுக்குத் தேவை இருந்தா நீங்க கேட்பீங்க… பகிர்ந்துக்கறது என்னோட விருப்பம்… அவ்வளவே!

படத்தில கட்டிருக்கற புடவை எனக்கு என் அண்ணன் மகள்கள் வாங்கித் தந்தது. இந்தியா போயிருந்த போது பார்த்த உடனே கொடுத்தாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது.

சரிப்பா… இந்த வாரம் கொஞ்சம் வேலை அதிகம். அதனால சுருக்கமா முடிச்சுக்கறேன்.

ஆங்… முடிக்கறதுக்கு முன்னால… உங்கள்ல பலர் விண்ணப்பம் அனுப்பிச்சிருந்தீங்க. நன்றி. நேரப் பற்றாக்குறையால எங்களுக்கு உகந்ததாப் படற விண்ணப்பங்களுக்கு மட்டும்தான் பதிலளிக்கறோம்னு தெரிவிச்சுக்கறேன். பதில் வரலைன்னா வெறுப்பாயிடாதீங்க. அனைத்தும் நலமேன்னு எடுத்துக்கங்க…

அடுத்த வாரம் பார்க்கலாமா? ஆங்கிலத்துக்குத் தாவறதா இருந்தா உங்ககிட்டே சொல்லிட்டுத்தான் செய்வேன், சரியா?
கீழ்க்கண்ட வழிகள்ல என்னைத் தொடர்பு:

எல்எல்ஜ.நிலா@ஜிமெயில்.காம்

http://www.facebook.com/profile.php?id=720120663#!/profile.php?id=720120663

http://groups.google.com/group/neyam

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author