மடை திறந்து… (6)

என்னப்பா, வாழ்க்கை எப்படி போகுது? இங்கே ஒரே பிஸி! ஆனாலும் எல்லாம் நலமே! ஒவ்வொருத்தர் வேலை இல்லைன்னு புலம்பறப்ப நமக்கு வேலை அதிகமா இருக்குன்னு அலுத்துக்கலாமா? இதுவும் ஒரு அனுபவம் இல்லியா! இருந்தாலும் கலைஞர்கள் போல, விaளையாட்டு வீரர்கள் போல, மனசுக்குப் பிடிச்சதே நம்ம வேலையா அமையணும்னு ஆசை இருக்கு… நமக்கு மனசுக்குப் பிடிச்சதென்னன்னா ஏதாவது புதுசு புதுசா க்ரியேட் பண்ணணும் – சினிமா, கதை, பத்திரிகை இந்த மாதிரி… அப்பறம் சுகமளிக்கணும்…

‘கண்ணில் தெரியுதொரு தோற்றம்’ படிக்கும்போது சினிமா பார்க்கற மாதிரி இருந்ததுன்னு சிலர் சொன்னாங்க. அந்தக் கதையை விஷுவலைஸ் பண்ணித்தான் எழுதினேன். அதைப் படமா எடுத்தா எந்த நடிகர்களைப் போடறதுன்னு கூட யோசிச்சு வச்சிருந்தேன்… அதுல ஆறு பிரதான பாத்திரங்கள்: ரகு, கங்கா, விக்ரம், யமுனா, விஜி மற்றும் அஞ்சலி. இந்தப் பாத்திரங்களுக்கு யார் பொருத்தமா இருப்பாங்கன்னு நீங்க நினைக்கறீங்கன்னு எனக்கு எழுதுங்க. உங்க தேர்வு எனக்குப் பிடிச்சிருந்ததுன்னா வழக்கமான பரிசு உண்டு. என்னோட தேர்வை அடுத்த வாரம் சொல்றேன்… (அப்படியே தயாரிப்பாளருக்கு வேண்டியவரா இருந்தா நம்ம கதையை அவர் கண்ணுல காட்டுங்க.. படத்தை உங்களுக்கு சமர்ப்பணம் பண்ணிறலாம் … )

என்னோட இரத்தினச் செவ்வில ‘சுகமளித்தல்’ங்கற வார்த்தையை பயன்படுத்திருந்தப்போ குழுவில ஒருத்தர் அதை குணமளித்தல்னு மாத்தினா எல்லாருக்கும் புரியுமேன்னு கேட்டாங்க. ஆனா healing, curing இந்த இரண்டு வார்த்தைகளுக்குமான வித்தியாசம் வெளில வரணுங்கறதுக்காக நான் சுகமளித்தல்னே இருக்கட்டும்னு சொன்னேன். Curing – குணமளித்தல் -அசௌகரியமான அறிகுறிகளை நீக்கறது. Healing – சுகமளித்தல் அந்த அசௌகர்யத்துக்கான மூல காரணத்தை நீக்கறது அப்படிங்கறது என்னோட புரிதல்.

கொஞ்ச நாள் முன்னால ஒரு மாணவி எங்கிட்ட "எனக்கு மருத்துவராகத்தான் விருப்பம். ஆனா எங்க வீட்டில வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நான் இப்போ படிக்கற கோர்ஸ்ல எனக்கு சுத்தமா விருப்பமில்லை. ஃபெயிலாயிடுவேனோன்னு பயமாயிருக்கு”ன்னு வருத்தப்பட்டாங்க. நான் அவங்ககிட்டே அவங்க மருத்துவராக விருப்பப்பட்டதுக்கான காரணத்தைக் கேட்டேன். அவங்க சொன்ன அதே காரணங்களுக்காக அவங்க சுகவராகலாமே, நோக்கம் எந்த வழில நிறைவேறினா என்னன்னு கேட்டேன். சரின்னு கேட்டுக்கிட்டாங்க. ஆனா அதுக்கப்பறம் தொடர்பு கொள்ளவே இல்லை. ஒண்ணு நான் சொன்னதுல முழுசா கன்வின்ஸ் ஆகியிருக்கணும். இல்லைன்னா இது ஒண்ணும் தேறாதுன்னு முடிவு பண்ணிருக்கணும். எப்படி இருந்தாலும் நலமே!

மினி போன வாரம் சுரேஷுக்கு உதவியா பதில் சொல்லிருந்தது எனக்குப் பிடிச்சிருந்தது. அதில உதவணும்கற உத்வேகம் இருந்தது. நம்மோட எண்ணங்களை நாம தேர்ந்தெடுக்கலாம்ங்கற தர்க்கம் எல்லா நேரத்திலயும் எடுபடாதுங்கறது என்னோட அனுபவம். நம்மோட உள்ளொளியை மனம் அடத்தியா மூடியிருந்தா நம்மோட ஆற்றல் நமக்குத் தெரியாது. தர்க்கம் புரியுமே தவிர அதிலருக்கற உண்மையை உணர முடியாது. நம்ம குருநாதர் டோலே சொல்ற எடுத்துக்காட்டு என்னன்னா – ஒருத்தர் தேனைப் பற்றி ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமே வாங்கி இருந்தாலும் தேனை சுவைச்சுப் பார்த்தாதான் அதை உணரமுடியும். அப்படித்தான் எத்தனை தத்துவம் படிச்சாலும், கேட்டாலும் அவை எல்லாம் நமக்குப் புரிஞ்சாலும், நம்ம ஈகோ அதனை உணரமுடியாமல் செய்யும். இந்த ஈகோ நாம வழக்கமா அர்த்தம் பண்ணிக்கற அகங்காரத்தைக் குறிக்கறதில்லை. நம்ம ஆன்மாவை மூடியிருக்கற அறியாமையைக் குறிக்குது. இங்கேதான் சுகவரோட உதவி பயன்படுது.

Light workers (நாம ஒளி சேவகர்கள்னு சொல்வோம்) – இந்த சொல்லைக் கேள்விப்பட்டிருப்பீங்களான்னு தெரியலை. சுகவர்களில ஒரு ரகம். மனித இனத்தோட ஆன்ம ஒளியை வெளிக் கொணர்றதுதான் இவங்க வாழ்க்கையோட நோக்கம். பூமி ஒரு புதுப்பிறவி எடுக்கற காலகட்டத்தில இருக்குன்னும் அதனால இந்த ஒளி சேவகர்களுக்கு இப்போ உலகத்தில நிறைய வேலை இருக்குன்னும் பல ஆவிகள் மூலமா செய்திகள் வந்திட்டிருக்கு. உலகத்தில நடக்கற இயற்கை அழிவுகள் கூட இந்த புதுப்பிறப்பினால ஏற்படறதுதான்னு அவங்க சொல்றாங்க. குரங்கிலருந்து மனித இனம் தோன்றின மாதிரி, மனித இனத்தில ஒரு புதிய பரிணாம வளர்ச்சி ஏற்படப் போகுதுன்னும் அதைத்தான் 21 டிச 2012ல முடியற மாயன் காலண்டர் குறிக்குதுன்னும் சொல்றாங்க. இதுக்கெல்லாம் என்ன ஆதாரம் அப்படின்னு நான் என்னோட தியானத்தில கேட்டேன். ஒரு வாரத்துக்குள்ள ஒரே நாள்ல மூணு நண்பர்கள் அவங்களுக்கு ஏற்பட்ட வினோதமான அனுபவங்களையும் அவங்க மனப்போக்கில ஏற்பட்ட மாற்றங்களையும் எங்கிட்ட பகிர்ந்துக்கிட்டாங்க. மூணு பேருக்கும் நான் சுகமளிச்சிருக்கேன். அவங்கெல்லாம் இப்போ நான் சொல்லிக் கொடுத்த உத்திகளை அடுத்தவங்களுக்கு பரிந்துரை செய்யறாங்கன்னும் கத்துக் கொடுக்கறாங்கன்னும் சொன்னாங்க. அவங்ககிட்டே ஏற்பட்டிருக்கிற மாற்றங்களை அப்படியே அதிசயிச்சுப் பார்க்கறேன். பலமுறை ‘மேலே’ இருக்கறவங்க நான் ஒரு ஒளி சேவகின்னு சொல்லிருக்காங்க. அதுனால இப்போ எனக்கும் நிறைய வேலை வரப்போகுதுன்னு ஆர்வமா எதிர்பார்த்துட்டிருக்கேன். மடை திறந்து கூட அந்த வேலைல்ல ஒரு பகுதிதானோன்னு உங்க பின்னூட்டங்களைப் பார்க்கும்போது தோணுது.

ஒளிசேவகர்கள் வித்தியாசமானவங்களே ஒழிய விசேஷமானவங்க இல்லைங்கறதை நல்லா புரிஞ்சிக்கணும். அவங்களைத் தூக்கி மேடையில உக்கார வச்சு கால்ல விழுந்திரக் கூடாது. நம்ம விசேஷமானவங்கங்கற எண்ணத்தை நமக்குத் தர்றது நம்ம ஈகோ. எனக்கும் சில சமயம் அப்படித் தோணும். முன்னாடியெல்லாம் இப்படித் தோண்றப்ப ‘ணங் ணங்’குன்னு என்னைக் குட்டிக்குவேன்… ‘இப்படியெல்லாம் தோணப்படாது’ன்னு என்னைக் கடுமையா கடிஞ்சுக்குவேன். இதுவும் ஈகோவோட வெளிப்பாடுதான் ‘நான் ரொம்ப நல்லவளாக்கும்’னு காட்டிக்கற முயற்சி. அதனால எல்லா எண்ணங்களையுமே இப்பப் பற்றற்றுப் பார்க்கறேன் (சரி… சரி… முயற்சி செய்யறேன்)… அதனால் என்னோட ஈகோ தன்னால பலமிழக்கறதைப் பார்க்க முடியுது.
பல வாசகர்கள் எனக்கு அவங்க பிரச்சினைகள் பற்றி தனி அஞ்சல் அனுப்பிச்சிருந்தாங்க. எல்லாத்தையும் படிச்சேன். பிரச்சினைகளோட வெளிப்பாடுதான் வேற வேற. அடிப்படை ஒண்ணுதான் – ‘என்னால இந்த சூழலை சமாளிக்க முடியலை’

அவங்க எல்லாத்துக்கும் பொதுவான ஒரு பயிற்சி கீழே இருக்கற சுட்டில இருக்கு. இந்தப் பயிற்சி நம்ம இடது வலது மூளைகளை சமநிலைக்குக் கொண்டுவருது. தலைக்குள்ளே கேள்விகள், குழப்பங்கள் ஓடுறவங்களுக்கு இது ரொம்ப உதவியா இருக்கும். ரெண்டே ரெண்டு நிமிஷம்தான் பிடிக்கும். எல்லாருமே இதை முயற்சி செய்யலாம்:
http://www.youtube.com/watch?v=YYk7V4BxP-U

தினம் தினம் இதை செஞ்சுட்டு வாங்க. மனம் அமைதியாகறது நல்லா தெரியும். அடுத்த வாரம் இன்னொரு பயிற்சி சொல்றேன்.

மின் அஞ்சல்களுக்கு பதில் சொல்ல முடியாததுக்கும் இங்கே அதிகம் எழுத முடியாததுக்கும் காரணம் இருக்கு. நிலாச்சாரல்ல புதுசா ஒரு ப்ராஜக்ட் நடந்திட்டிருக்கு. Volunteers, freelancers அவசரமா தேவை. முகப்புப் பக்கத்திலருக்கற சுட்டிகள் வழியா தொடர்பு கொள்ளுங்க.

முனைவர் பட்ட ஆய்வுக்காக ஸ்வீடன் போற ஹேமாவுக்காக என்னோட நெக்லஸ் ஸ்டோரி. குடும்பத்தில நடந்த ஒரு விசேஷத்துக்காக எங்க மாமியார் சில வருஷங்கள் முன்னால எனக்குப் பட்டுப்புடவை வாங்க கொஞ்சம் பணம் தந்தாங்க. நான் புடவைக்கு பதிலா படத்தில போட்டிருக்கற நெக்லஸை சென்னை கேரளா ஜுவல்லர்ஸ்ல வாங்கினேன். அதை அவங்ககிட்டே ஃபோன்ல சொன்னப்ப ரொம்ப சந்தோஷப் பட்டாங்க. அதுதான் அவங்ககிட்டே நான் கடைசியாப் பேசினது. திடீர்னு இறந்துட்டாங்க. அதுக்கப்பறம்தான் நான் முதல்முதலா அவியுலகத் தொடர்புக்காக மீடியம் ஒருத்தரை அணுகினது. அவங்க தன்னை அடையாளப் படுத்திக்கறதுக்கு சொன்னது இந்த நெக்லஸை வாங்கிக் கொடுத்தவங்கன்னு. எப்போ வேற ஒரு மீடியம் மூலமா அவங்க வந்தாலும் அவங்க சொல்ற அடையாளம் இதுதான். அவங்க செய்திகள் மூலமா நான் நிறைய சுகம் பெற்றிருக்கேன். அதனால எனக்கென்னவோ இந்த நெக்லஸ் ஒரு தாயத்து போல. எப்பவுமே போட்டிருப்பேன்.

Nilaஇந்தப் படத்தில கட்டிருக்கற புடவை திருச்சி ஆர்.இ.சில எம்.டெக் பண்ணும்போது குடும்பத்தில நடந்த முதல் கல்யாணத்துக்காக வாங்கினது. தஞ்சாவூர்ல அத்தை கூடப் போய் பல கடைகள்ல அலைஞ்சு வாங்கினேன் (அத்தையின் பொறுமைக்கு வந்தனம்). புதுசா இருக்கும்போது ரொம்ப அழகா இருந்தது. Pleasant Pink.

சரிப்பா… பேச நிறைய விஷயம் இருக்கு. ஆனா எழுத நேரமில்லை. அடுத்த வாரம் பார்ப்போம்… உங்களை நல்லா கவனிச்சுக்கங்க… சரியா?

மறந்துட்டேன்… நன்கொடை கொடுக்க முன் வந்திருக்கற சுரேஷுக்கு நன்றி. தொழில் நுட்ப உதவியோட நிலாச்சாரல் வேலைகளை எளிமையாக்கறதுக்கான ஏற்பாடுகள் செய்ய ரொம்ப நாளா முயற்சி செய்யறோம். அதுக்கு இந்தப் பணம் உதவும். அதனால அன்புடன் ஏற்றுக் கொள்கிறோம். இன்னும் ஆடியோ வீடியோ எல்லாம் கொண்டு வரணும்னு ஏகப்பட்ட ஆசைகள்… நிறைவேறும் காலம் வரும்னு நம்புவோம். போன வாரம் என்னோட வேண்டுகோளை ஏற்று வேலை செய்ய முன்வந்த அன்பர்களுக்கும் மிக்க நன்றி… நான் நிலாச்சாரல் இதழை நிறுத்தலாம்னு முடிவு செஞ்சப்போ சித்ரா, வஞ்சி ரெண்டு பேரும்தான் ஊர் கூடி தேர் இழுக்கலாம் வாங்கன்னு ஒவ்வொருத்தரையா கெஞ்சி கொஞ்சி கூட்டிட்டு வந்தாங்க. எனக்கு முழுமையா நம்பிக்கை இல்லாமத்தானிருந்தது தொடர முடியும்ன்னு. ஆனா அறிவிப்பு வந்து சில மாதங்களுக்குப் பின்னும் நிலாச்சாரல் தொடருது… நம்மால பேசிக்க முடியுது. அதனால அவங்க ரெண்டு பேருக்கும் பெரிய ஓ….

சரி… அடுத்தவாரம் பேசறவரைக்கும் சமத்தா இருங்கப்பா… நான் பதில் எழுதலைன்னாலும் நீங்க செய்தி அனுப்புங்க. கண்டிப்பா படிப்பேன்.

பாரதி, நீங்க அடிக்கடி நினைவில வர்றீங்க. நலம்தானே?

அபரிமிதமான அன்புடன்,
நிலா

About The Author

10 Comments

 1. Maithreyi

  அன்புல்ல ணில,

  Mய் சொஇcஎ இச்:

  றகு – ணிலல்கல் றவி
  Gஅங – றதிகா
  Vஇக்ரம் – Pரித்விரஜ்
  Yஅமுன – ஸ்ருதி றாஜ்
  ஆஞலி – Kஉஷ்ப்கு
  Vஇஜே – ஸ்ரிவித்யா

  ஆப்பாடா, மோச்சு வஙுது….

 2. Maithreyi

  Dear Nila,

  How do I subscribe to Nilacharal? Can I send my contribution online? Please advice.

  regards, Maithreyi.

 3. Hema

  Thanks for sharing the nacklace secret Nila, Her blessings always with you……nice to know about light workers….I have lots of doubt in that….will ask you soon…keep flowing…take care

 4. mini

  Nila, How are you doing?

  Raghu – Prakash Raj
  Ganga- Radika or Suhasini/ Fatima babu /Geetha. Intha charku enaku niraya thonuthupa. may be the bestna Geetha solalamo?
  Anjali – Nadiya or Simran
  Vikram- Actor Vikram
  Yamuna- Asin
  Viji – Jenilia

  I liked all the characters in the story. Raghuvaran ippa illa. irunthu irntha I would have selected him and Rohini for Ganga.

 5. mini

  Nila, who chose the name Nilacharal”? I love this name very much. Is there any reason behind the name?”

 6. Pattukkottai-BALU

  அன்பு சகோதரி நிர்மளாராஜுவிர்க்கு என் இனிய நிலாவில் மீண்டும் பட்டுக்கொட்டை பாலு, வெளிச்சம் பாய்ச்ச வருகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நிலாவில் வெளிச்சமிட்டேன்.

 7. Suresh

  nila,
  madai thiranthu (nila vin-manasai theranthu) for sure, it will be helpful to many more who is really required that.. Hearty welcome to all LIGHT WORKERS

  mini,
  Sorry about that, I did not noticed your comments to me, after nila referred I’ve seen, thanks a lot for that. but u no, lot of things not in our control.. let see I wanna do the same. but I couldn’t 🙂

  sorry to late response (quite busy with work)

  Suresh
  Brisbane (Australia)

 8. Suhu

  Hi
  I like the story kannil thariuthu oruthotram,I saw that thotram,Here is my choice Rahu–Rahuvaran -Pramid Natrajan
  Ganga–Ravathi,Suhasini,Even you too(Nila).
  Anjali-Rohini,Renuga(Pramy)
  Vilkram-Arya,Surya,Vikram
  Yamuna-Thamana,Thrisha
  Viji–PriyaMani

 9. suja

  மிக நன்றாக இருக்கிறது, நிலா. க.தெ.தோ எனக்கு மிகவும் பிடித்த தொடர்.
  ரகு – பிரகாஷ் ராஜ்
  கங்கா – ராதிகா
  விக்ரம் – சித்தார்த் (பாய்ஸ்) அல்லது கார்த்திக் (கண்ட நாள் முதல்)
  யமுனா – தமன்னா அல்லது அஞ்சலி (அங்காடி தெரு)
  விஜி – தீபா வெங்கட்
  அஞ்சலி – ஐஸ்வர்யா (அபியும் நானும்)

Comments are closed.