மனதைக் கவர்ந்த சில பொன் (!!!) மொழிகள் (2)

99 சதவிகித வக்கீல்கள் மற்ற வக்கீல்களுக்கு கெட்ட பெயர் வாங்கித் தருகிறார்கள்.

*****

மனசாட்சி என்பது உடலின் மற்ற பாகங்கள் சந்தோஷமாக இருக்கும்போது உறுத்துவது.

*****

எல்லாமே சரியாக நடக்கிறது என்பது போலத் தோன்றினால் நீங்கள் எதையோ கவனிக்கத் தவறிவிட்டீர்கள் என்று பொருள்.

*****

ஒளியின் வேகம் தெரியும். இருட்டின் வேகம் என்ன?

*****

வானவில்லை ரசிக்க வேண்டுமானால் மழையைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

*****

கடின உழைப்பு என்பது பிற்காலத்தில் பலனளிக்கலாம். ஆனால் சோம்பேறித்தனம்தான் இப்போது மகிழ்ச்சி தருவது.

*****

பாதி செத்துவிட்டேன் என்று சொல்கிறோமே… அதேமாதிரி இரண்டு முறை நிகழ்ந்து விட்டால் என்ன ஆகும்?

*****

முதல் முயற்சியில் வெற்றி அடையவில்லையென்றால் முயற்சி செய்ததற்கான எல்லா சாட்சிகளையும் மறைத்து விடுங்கள்.

*****

என்னுடைய மெக்கானிக் சொன்னான். "உங்கள் காரின் பிரேக்கை சரி செய்ய முடியவில்லை. அதனால் ஹாரன் சத்தத்தை இரண்டு மடங்கு கூட்டிவிட்டேன்"

*****

அநேகம் பேருக்குக் காமிரா போல ஞாபக சக்தி இருக்கிறது. ஆனால் பெரும்பாலும் அவர்கள் ஃபிலிம் சுருள் போட மறந்து விடுகிறார்கள்.

(Source : Net resources)

About The Author

23 Comments

 1. suganthe

  ரொம்ப நல்லாயிருக்கு
  கடின உழைப்பு என்பது பிற்காலத்தில் பலனளிக்கலாம். ஆனால் சோம்பேறித்தனம்தான் இப்போது மகிழ்ச்சி தருவது.
  இது ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு

 2. Rishi

  மூலப்பொருள் சிதைவுறா அருமையான தமிழாக்கம்! ரசிக்கும்படியாக இருந்தது.

 3. Dr. S. Subramanian

  >>ஒளியின் வேகம் தெரியும். இருட்டின் வேகம் என்ன?

 4. Dr. S. Subramanian

  My comment in the previous block did not appear because of a mix of Thamizh and English.
  Here is my comment on that ponmozhi”
  Iruttu is the opposite of light, like matter–anti-matter, electron-positron etc. Accordingly the speed for light and darkness (iruttu) is the same but they move in opposite directions. When they collide, what happens?–total chaos. It is like when an irresistible force meets an immovable object.”

 5. venkatachalam.paza

  உங்கல் முயர்ச்சி தொடரட்டும். இது மிகவும் பாராட்டுக்கு உரிது.

 6. Girija

  தகவல் பரிமாற்றத்திற்கு மிக்க நன்றி டாக்டர் சுப்ரமணியன்

 7. neerai athippu

  பாரதி யார்?
  தீமைகளைச் சுட்டெரிக்கும் அனற்பிழம்பு
  திசைவாசம் பரப்புகின்ற மணக்குழம்பு
  ஆமைகளை நிமிரவைக்கும் முதுகெலும்பு
  அத்தனைப்பா மொத்தமுமே அடிக்கரும்பு
  ஊமைகளைப் பேசவைக்கும் நா நரம்பு
  உணர்ச்சியிலே இமயமில்லை அவன் வரம்பு
  ஆமிவைகள் எழுத்துக்குள் அடங்காப் பெற்றி
  அதனால்தான் அவ்னுக்கு என்றும் வெற்றி!
  – நீரை. அத்திப்பூ (சே.அப்துல் லத்தீப் ) செல்: 9444446350

 8. kavignar. neerai.athippu

  உண்மை நண்பன்

  உண்மை பேசும் நண்பன்
  இந்த உலகில் பெரிய செல்வம் – அவன்
  உறவில் நெஞ்சம் மகிழும் போது
  உலகம் உன்பின் செல்லும்!

 9. kavignar.Neerai.Athippu

  புதுப்புது அர்த்தம் புலப்படும் நித்தம்
  புத்தகம் படித்தால் கிட்டும் – நாம்
  விதைப்பது நன்றாய் விளைந்திட இன்றே
  விரைவோம் நூலகம் பக்கம்!
  கவிஞர். நீரை. அத்திப்பூ செல்: 9444446350

 10. kavignar neerai athippu

  உழைப்பா? பிழைப்பா?

  சேற்றுக் கழனியில் நாற்றுச் சிரிக்கையில் உழைக்கிறான் – அது
  ஏற்றக் கதிர்மணி தூற்றிப் பிரிக்கையில் உழைக்கிறான் – நெல்
  ஏற்றித் தலையினில் தூக்கிச் சுமக்கையில் உழைக்கிறான் – எனில்
  வீட்டில் கஞ்சியை ஊற்றிக் குடித்தே பிழைக்கிறான் -உயிர் பிழைக்கிறான்.
  கவிஞர். நீரை. அத்திப்பூ செல்: 9444446350

 11. M.K.Stalin

  பாதி செத்துவிட்டேன் என்று சொல்கிறோமே… அதேமாதிரி இரண்டு முறை நிகழ்ந்து விட்டால் என்ன ஆகும்?

 12. neerai athippu

  என் தமிழ்தான் என் தமிழ்தான் எந்தன் உயிர் காற்று – அதை
  எண்ணிவிடில் என்னுள்ளே இன்பத்தேன் ஊற்று!
  கவிஞர் நீரை. அத்திப்பூ செல்: 9444446350

 13. neerai athippu

  கண்ணைக் குத்த வருபவன் கையைக் கனிவாய் எடுத்து முத்தமிடு – அதில்
  கலந்து இருக்கும் அழுக்கைப் போக்க கண்ணீர் கொடுத்து சுத்தமிடு
  உன்னை அழிக்க நினைப்பவர் வாழ்வில் உதவிகள் செய்து வெற்றி கொடு -அவர்
  உறவும் நட்பும் உயர்ந்து வாழ உன்னால் முடிந்ததைக் கற்றுக் கொடு.
  கவிஞர். நீரை. அத்திப்பூ செல்: 9444446350

 14. kavipperoli. neerai athippu

  நிலாச்சாரல் பொழின்ற ஒளிவெள்ளம் நெஞ்சில்
  நிறைவான மகிழ்வதனைத் தருகிறது விஞ்சி
  உலா வந்து உலாவந்து ஒவ்வொரு நாள்வேலை
  உயிர் உணர்வில் கலக்கிறது ஒரு கோடி நன்றி.
  கவிப்பேரொளி. நீரை. அத்திப்பூ செல்: 9444446350

 15. neerai athippu

  தொடர்ந்து வரும் வான் நிலா வெளிச்சக் காற்று
  துணைவரும் மனத்தினில் மகிழ்ச்சி ஏற்று
  இடம்தரும் இன்பத்தின் அணையா ஊற்று
  இதயத்தான் இசைக்கிறது புதிய பாட்டு!
  கவிப்பேரொளி நீரை அத்திப்பூ, ஆசிரியர் தகவல் முத்துகள்” 9444446350″

 16. neerai athippu

  தொடர்ந்து வரும் வான் நிலா வெளிச்சக் காற்று
  துணைவரும் மனத்தினில் மகிழ்ச்சி ஏற்று
  இடம்தரும் இன்பத்தின் அணையா ஊற்று
  இதயத்தான் இசைக்கிறது புதிய பாட்டு!
  கவிப்பேரொளி நீரை அத்திப்பூ, ஆசிரியர் தகவல் முத்துகள்” 9444446350″

Comments are closed.