மயக்கம்

இருள் கவிகிறது
குறுக்குச்சுவரின் முன்னும் பின்னும்
அசையும் இரு நிழல்கள்

தாளம் மாறாது
அதிரும் பறை

பெருமூச்சில் அசையும் இலைகள்
செவி நிறைக்கும் நிலவின் பாடல்

இருளில் கலந்து
மறைந்தன நிழல்கள்!

About The Author