மலரின் கவிதைகள்

பிறப்பு

உதித்த சூரியன் மேகம் கலைத்த நேரம்
பனித்துளி போர்வை விலக்கிய கனம்
மெலிதாய் ஒரு முனகல்
வேரின் உயிர் பெற்று
மொட்டின் கருப்பை உடைத்து
மலர்ந்தது மலர்……….

வாசமில்லா மலர்கள்

தாங்கும் கொடியும்
முள்ளாய்த் தோன்றும்
உலவும் பொன்வண்டும்
தனியே விலகும்
வருந்திக் கடக்கிறேன் நான்
வெள்ளைத் தாரகை உன்னைத்
தனியே காண்கையில்
ஆனால் நீயோ
தொட்டுப் போகும் தென்றலுடன்
கேலி பேசி விளையாடுகிறாய்……………..

About The Author

2 Comments

Comments are closed.