மழை

மழையே மழையே விரைவாய் வா
மண்ணில் வெப்பம் தணித்திட வா
குளங்கள் நிறையப் பெய்திட வா
குதித்தே நீந்தி ஆடிடுவோம்
ஆற்றில் நீரைப் பெருக்கிட வா
அதனில் படகை ஓட்டிடுவோம்
கிணற்றில் நீரை உயர்த்திட வா
கேணி கண்மாய் நிறைந்திட வா
மீன்கள் துள்ளிக் குதித்திட வா
மகிழ்ச்சியில் தவளைகள் கத்திட வா
ஏரியில் தண்ணீர் நிரம்பி விட்டால்
எல்லோ ருக்கும் கொண்டாட்டம்
குடிக்கும் நீரும் உன்னாலே
கொடி செடி வளர்வதும் உன்னாலே
பயிர்கள் செழிக்கப் பெய்திடுவாய்
பலவகை உணவும் தந்திடுவாய்
வேண்டிய மட்டும் நீர் பொழிவாய்
விரைந்தே எங்கள் துயர் களைவாய்!

About The Author