மாகாய்

தேவையான பொருட்கள் :
 
மாங்காய்கள் – 25
மிளகாய்த்தூள் – 3 ஆழாக்கு
வெந்தயம் – அரை ஆழாக்கு
உப்பு – 4 ஆழாக்கு
எள்ளெண்ணெய் – அரை கிலோ
சிகப்பு மிளகாய் – 25
கடுகு – ஒரு தேக்கரண்டி
L.G. பெருங்காயம் – தேவையான அளவு

செய்முறை : 

மாங்காய்களை நன்றாகக் கழுவி உலர்ந்த துணியில் துடைத்து விட்டு, 4 ஆழாக்கு பொடித்த கல்லுப்பைக் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் குலுக்கி விடவும்.

மூன்று நாட்கள் இதே போன்று செய்து, நான்காம் நாள் துண்டுகளை நன்றாகப் பிழிந்து, ஒரு உலர்ந்த துணியை வித்துக் காய வைக்கவும்.

வெறும் வாணலியில் அரை ஆழாக்கு வெந்தயத்தையும் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

துண்டுகள் நன்றாக உலர்ந்தவுடன் ஊற வைத்த உப்பு நீரை சற்று வெயிலில் வைத்து விட்டு, அதில் மிளகாய்த் தூளையும், வெந்தயத் தூளையும் போட்டு நன்றாகக் கலந்து விடவும்.

அரை கிலோ எள்ளெண்ணெயை சுட வைத்து, கடுகைப் போட்டு வெடித்தவுடன் பெருங்காயத்தை சேர்த்து வறுத்து, 25 சிகப்பு மிளகாய்களையும் சேர்த்து வறுத்து, உலர்ந்த உப்பு மாங்காய்த் துண்டுகளைப் போட்டு நன்றாகக் கலந்து விடவும்.

குறிப்பு: தக்க முறையில் தயாக்கப்பட்டால் இந்த ஊறுகாய் இரண்டு வருடங்கள் ஆனாலும் நன்றாக இருக்கும். இதை உபயோகித்து தயிர் பச்சடியும் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

About The Author