மாங்காய் கடுகு சாதம்

தேவையான பொருட்கள் :

அரிசி – ஒரு கப்
கிளிமூக்கு மாங்காய் (அ) குண்டு மாங்காய் – ஒன்று
சிறு துண்டு பெருங்காயம்
சிகப்பு மிளகாய் – ஆறு
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
எள்ளெண்ணெய் – 2 மேசைக் கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்துமல்லி – தேவைக்கேற்ப

செய்முறை:

சாதத்தை உதிரியாக தயாரித்துக் கொள்ளவும். மாங்காயை நன்றாகக் கழுவிக் கொண்டு துருவி வைத்துக் கொள்ளவும்.

தேங்காய்த் துருவலுடன் கடுகு, சிகப்பு மிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும்.

இறுதியில் மாங்காய்த் துருவலையும் சேர்த்து ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.

பின்னர், தேவையான அளவு சாதத்துடன் எள்ளெண்ணெயையும், அரைத்த விழுதையும் சேர்த்து கலந்தால் சுவையான மாங்காய் கடுகு சாதம் ரெடி!

About The Author