மாம்பழ ஐஸ்கிரீம்

தேவையான பொருட்கள்:

பால் – தேவையான அளவு,
மாம்பழக்கூழ் – 200 மி.லி (கடைகளில் கிடைக்கும்),
மாம்பழ எசென்ஸ் – சில துளிகள்,
வெண்ணெய் – 50 கிராம்.

செய்முறை:

பாலை நன்றாகச் சுண்டக் காய்ச்சிக் குளிரச் செய்யுங்கள். பிறகு, அதில் மாம்பழக் கூழ் முதலான எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து உறையத்தில் (freezer) மூன்று மணி நேரம் வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து, மின் அம்மியில் (மிக்சி) சற்று அடித்து மீண்டும் ஒரு மணி நேரம் உறையத்தில் வைத்து எடுத்தால், அருமையான மாம்பழ ஐஸ்கிரீம் தயார்!

சுவைத்துப் பாருங்கள்! கோடைகாலத்தைக் கொண்டாடுங்கள்! மறவாமல் உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

About The Author