மாம்பழ ஜஸ்கிரீம்

தேவையான பொருட்கள்:

மாம்பழக் கூழ் – 1 கிலோ
கண்டெஸ்டு மில்க் – அரை கிலோ
விப்புடு கிரீம் – அரை கிலோ
மாம்பழத் துண்டுகள் – 1 கப் (தோல் நீக்கிய சிறிய துண்டுகள் )
சீவிய பாதாம் துண்டுகள் – தேவைக்கேற்ப

செய்முறை:

1. மாம்பழக் கூழ், கண்டெஸ்டு மில்க்,விப்புடு கிரீம் மூன்றையும் ஒன்றாகக் கலந்து நன்றாக மிக்ஸரில் அடித்துக் கொள்ளவும்.

2. கலவையை இரண்டு மணி நேரம் பிரீசரில் வைத்து வெளியே எடுத்துக் கொள்ளவும்.

3. மாம்பழத் துண்டுகளைப் போட்டு கலந்து கொள்ளவும்.

4. மீண்டும் இரண்டு மணி நேரம் பிரீசரில் வைத்து, பின், சீவிய பாதாம் தூள்களைத் தூவி பரிமாறவும்.

About The Author