மாற்றத்தின் ரகசியம்

மாற்றமென்பது
வேறொன்றுமில்லை:
இவ்விடத்திருப்பதை
அவ்விடம் வைப்பதுதான்

மேலும் அது
வேறொன்றுமில்லை
அவ்விடத்திருப்பதை
இவ்விடம் வைப்பதுதான்!

அதற்கென
தனியாய் ஏதும்
சக்தி தேவையில்லை-
இதை அங்கும்
அதை இங்கும்
வைக்கவேணுமென்ற
விருப்பம் தவிர.

About The Author

1 Comment

  1. yematam

    சூப்பர் அப்பு….. நீ தான்டா கவித எழுத பிரந்தவன்

Comments are closed.