மாலைப்பொழுது

பணியிடம் களைகிறேன்
மேய்ச்சல் முடித்த ஆடுகள்
திரும்புகின்றன
மாலைப்பொழுதின்
நீலம் பாய்ந்து
ஆகாயமாய்க் கனக்கும் இதயம்

வீடடையும் ஆடுகள்
பூட்டப்படும் தூண் காலில்
பசியுடன் உண்ணும்
மீதியையும்.

காப்பி தீனியுடன்
அம்மாவின் திட்டும் கலந்து
உள் வாங்கும்
விளையாட மறந்த சிறுவன்
வீட்டுப்பாடங்களில் மூழ்குவான்.

About The Author