முகப் பொலிவிற்கு சில குறிப்புக்கள்

1. வெள்ளரிச் சாறு, பன்னீர், எலுமிச்சைச் சாறு மூன்றும் சம அளவு கலந்து முகத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து முகம் கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகப்பரு குறையும்; முகம் பொலிவடையும்.

2. 50 மி.லி. பால், சிறிது உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து முகம் கழுவினால் சருமத்தில் உள்ள துவாரங்கள் சுத்தமாகும். 

3. மஞ்சள், கோதுமை மாவு, நல்லெண்ணை சம அளவு கலந்து முகத்தில் தடவினால் ரோமங்கள் உதிர்ந்துவிடும். 

4. ஒரு தேக்கரண்டி உளுந்துடன் 4 பாதாம் பருப்புகளை சேர்த்து தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும். முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்துக் கழுவினால் முகம் பொலிவடையும்.

5. ஒரு மேஜைக்கரண்டி பால்பவுடர், ஒரு தோல் நீக்கிய வெள்ளரிக்காய், ஒரு தேக்கரண்டி தயிர் ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அடித்து, பசையை முகத்தில் தடவவும். 15 – 20 நிமிடம் கழித்து இளம் சூடான நீரில் கழுவினால் முகம் பொலிவடையும். 

6. ஒரு முட்டையை நன்கு அடித்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணை கலந்து உலர்ந்த சருமம் உள்ளவர்கள் முகத்தில் தடவினால், சருமம் மிருதுவாகும்.

7. அரைத் தேக்கரண்டி தேன், அரைத் தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு மற்றும் 3 மேஜைக் கரண்டி தயிருடன் ஒரு முட்டை வெள்ளை சேர்த்து அடிக்கவும். முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து இளம் சூடான நீரில் முகம் கழுவவும்.

8. ஒரு முட்டை மஞ்சள் கரு, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி விட்டமின்-இ எண்ணை மற்றும் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும். பின் இளம் சூடான நீரில் கழுவவும்.

9. ஒரு வாழைப்பழம், ஒரு மேஜைக்கரண்டி தேன், இவையிரண்டையும் நன்கு குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். உலர்ந்த சருமம் மிருதுவாகும்.

10. ஓட்ஸ் மீலை நீரில் நன்கு கலந்து பசை போல் முகத்தில் தடவி உலர விடவும். பின் இளம் சூடான நீரில் கழுவினால் முகம் பொலிவடையும்.

About The Author

26 Comments

 1. anisha

  mugathil thayir udan manjal kalandhu mugathil thadavi 15 min kalithu mugam kaluva, mugam prakasamagavum, polivudanum irukum.

 2. venkatesh

  இட்ச் நிcஎ ஜுச்ட் சுபெர்ப்…..

 3. subarani

  fஅcஎகு நல்ல உசெ உல்ல குரிப்புகல் தந்துல்லிர்கல் நன்ரி

 4. sundhari

  றெஅல்ல்ய் சுபெர் டிப்ச். ஈட் இச் உசெfஉல் fஒர் அல்ல் அகெ நொமென்ச். Tகன்க் யொஉ சொ முச்.

 5. yoga

  ஈ லிகெ அல்ல் டிப்ச். இட் இச் வெர்ய் உசெfஉல் fஒர் அல்ல்

 6. mohana

  வெர்ய் வெர்ய் சுபெர் டிப்ச் இன் டமில்

 7. divya

  தேன் முகதுல போஇட்ட முடி வெல்லை ஆகாத . சொல்லுக

 8. Vasu

  தேன் மட்ட்ரும் மஞல் முகதுல போஇட்ட முடி கொட்டுவது மட்ட்ரும் வெல்லை ஆகாத . சொல்லுக..?

Comments are closed.