முகம் பொலிவுடன் திகழ சில டிப்ஸ்..

நம் உடல் நிறம் எத்தகையதாக இருந்தாலும் பொலிவுடன் திகழ வேண்டும் என எண்ணுவது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும். அதிகம் செலவாகக் கூடாது; முகமும் பளிச்சென இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? இதோ உங்களுக்காக சில முக அழகுக் குறிப்புகள்:

* பீட்ரூட்டை சிறு துண்டுகளாக்கி அரைத்து சாறு எடுத்து முகத்தில் தடவி 5 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். 10 நிமிடங்களுக்குப் பிறகு லேசாகக் கழுவி விட்டு, கடலை மாவால் மென்மையாகத் தேய்த்து பின் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.

* சந்தனம், 4 சொட்டு ரோஸ்வாட்டர், 5 சொட்டு பால் கலந்து முகத்தில் பூசி விட்டு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்கி பொலிவாக இருக்கும்.

* காலையில் தினமும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் முகம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

* பயிற்றுமாவு, கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து தயிர் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது ஒரு சிறந்த ஃபேஷியல்.

* வறண்ட சருமம் உள்ளவர்கள் பாலாடையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் வறண்ட தன்மை மாறி முகம் பளபளப்பாகும்.

* துருவி வேக வைத்து மசித்த கேரட்டை முகம், உடலில் மசாஜ் செய்தால் சருமம் மிருதுவாவது மட்டுமல்லாமல் பொலிவுடனும் திகழும்.

* பேரிச்சம்பழத்தை மைய்ய அரைத்து வெண்ணை சேர்த்து கண்ணை சுற்றி பூசினால் கருவளையம் மறையும்.

* பாலுடன் எலுமிச்சைச் சாறு கலந்து, திரிந்து போகும் பாலை முகத்தில் பூசி வந்தால் முகம் பொலிவாகும். இது ஒரு வகையான ப்ளீச்சிங் முறை.

என்ன.. அனைத்தும் மிக எளிமையான குறிப்புகள்தானே? செய்து பாருங்கள்.

Disclaimer: Beauty tips in this section is provided by Ms. Gayathri for free. Nilacharal.com cannot take any responsibility for the authenticity and contents of the response.

About The Author

14 Comments

  1. dharani

    எனக்கு சூரிய ஒலியில் சென்ரால் முகம் கருத்து விடுகிரது அத்ர்கு ஒரு குரிப்பு சொல்லுகல் pls

  2. priya

    கலர் ஆவதர்க்கு டிப்ச் சொல்லுங்க.

Comments are closed.