முக்கியமானது..

(மின்னஞ்சலில் வந்த செய்தியின் மொழியாக்கம்)

வகுப்பறைக்குள் நுழைகிறார் நிர்வாகப் பாடங்கள் எடுக்க வந்த ஒரு பேராசிரியர்.

”மாணவர்களே, இன்று நாம் செய்முறை விளக்கத்துட‎ன் ஒரு பாடத்தைக் கற்போம்.”

வாய்ப்புறம் அகலமாய் இருந்த, ஒளி ஊடுருவக் கூடிய ஒரு பெரிய பிளாஸ்டிக் ஜாடியை எடுத்து வரச் செய்தார் பேராசிரியர். ஜாடி ஒரு மேஜையி‎ன் மீது வைக்கப்படுகிறது. ஏழெட்டு பெரிய கற்களை எடுத்து வரச் செய்த பேராசிரியர் அவற்றையும் மேஜையி‎ன் மீது வைக்கிறார். பி‎ன், கற்களை ஒவ்வொ‎‎ன்றாக எடுத்து ஜாடிக்குள் போட ஆரம்பிக்கிறார்.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார், ”ஜாடி நிறைந்து விட்டதா?”

அனைத்து மாணவர்களும் கோரஸாக, ”யெஸ்.. ஸார்!”

சலனமில்லாமல் ”நல்லது” எ‎ன்ற பேராசிரியர், பி‎ன் சிறு ஜல்லிக் கற்களைக் கொண்டு வரச் செய்தார். அவற்றை ஒவ்வொ‎ன்றாக எடுத்து ஜாடியினுள் போட ஆரம்பித்தார். பெரிய கற்களி‎ன் இடைவெளிகளில் ஜல்லிக்கற்கள் நுழைந்தன. ஜாடியைக் குலுக்கி விட, ஜல்லிகள் கிடைத்த இடைவெளிகளை ஆக்கிரமிப்பு செய்தன.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார். ”ஜாடி நிறைந்து விட்டதா?”

வகுப்பறையில் நிசப்தம். ஒரு மாணவர் மட்டும் ”அப்படி நிச்சயமாக சொல்லிவிட முடியாது” எ‎ன்றார்.

மெல்லிய பு‎ன்னகையுடன் ”நல்லது” எ‎ன்ற பேராசிரியர், பி‎ன் ஒரு வாளி நிறைய ஆற்று மணலைக் கொண்டு வரச் செய்தார். மணலை கொஞ்சம் கொஞ்சமாக அள்ளிப் போடப் போட, கிடைத்த இடைவெளிகளில் மணல் ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தது. ஜாடியைக் குலுக்கி விட, மேலும் மணலை அள்ளிப் போட முடிந்தது.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துக் கேட்கிறார். ”ஜாடி நிறைந்து விட்டதா?”

இப்பொழுது, வகுப்பறை முழுவதும் கோரஸாக, ”நிச்சயமாக ‏இல்லை!”

சிரித்த பேராசிரியர் ”நல்லது” எ‎ன்றவாறே, ஒரு வாளி நிறைய தண்ணீரைக் கொண்டு வரச் செய்தார். தண்ணீரை ஊற்ற ஊற்ற மணலைக் கரைத்துக் கொண்டு தண்ணீர் நிறைந்தது ஜாடியினுள்.

ஜாடி நிறைந்தவுட‎ன் மாணவர்களைப் பார்த்துச் பேச ஆரம்பிக்கிறார் பேராசிரியர். ”ஜாடி நிறைந்து விட்டதா எ‎ன்று ‏இப்போது நான் கேட்கப் போவதில்லை. ‏இதிலிருந்து நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் எ‎ன்ன?”

ஒரு மாணவர் எழுந்தார். ”நமது நேர நிர்வாகம் எ‎ன்பது குறிப்பிட்ட வேலைகளை அதற்குள் செய்கிறோம் எ‎ன்பதல்ல; எவ்வளவு வேலை செய்து கொண்டிருந்தாலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் மேலும் சில சிறிய வேலைகளையும் முடிக்க முடியும்”

”இல்லை.. அதுவல்ல பாடம்” பேராசிரியர் பதிலுரைத்தார்:

”பெரிய கற்களை நீங்கள் முதலில் ஜாடிக்குள் போடாவிடில், பி‎ன்னர் எப்போதுமே அவற்றை நீங்கள் போட முடியாது; ஜல்லிகளும் மணற்துகள்களும் அடைத்துக் கொண்டிருக்கும். வாழ்க்கையை ஒரு ஜாடியாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பெரிய கற்கள் எ‎ன்பவை இ‏ங்கே உங்கள் அ‎ன்பிற்குரியவர்களை, உங்கள் த‎ன்னம்பிக்கையை, உங்கள் கல்வியை, உங்கள் எதிர்காலக் கனவுகளை, குறிக்கோள்களைக் குறிக்கி‎ன்றன. இவற்றை அந்தந்தக் கால நேரங்களில் சரியாக உள்ளிடாவிட்டால் பி‎ன்னர் அவற்றை உள்ளிட முடியாது. விளைவு?”

”ஆகவே, ‏இன்று வீட்டுக்குச் செல்லுங்கள். ந‎ன்றாகத் தூங்குங்கள். காலையில் எழுந்து உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், ‘பெரிய கற்கள் என்பவை எ‎ன் வாழ்க்கையில் யாவை’ எ‎ன்று”

About The Author

17 Comments

 1. vislakshee

  வார்தைகலால் கூரமுடியவில்லை…இனியாவது பெரிய கல்லு எது என்றூ பார்த்து செய்யவேண்டும்

 2. Rishi

  வருகைக்கு நன்றி மினி, ஷர்வின், விஷாலக்ஷி.

  விஷாலாக்ஷி
  பெரிய கல்லு எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் உங்கள் வாழ்க்கையில்? (கேட்கலாம்தானே??)

 3. thirunavukkarasu

  மிகவும் பயனுல்ல கருத்து”-திருனவுக்கரசு”

 4. V.Ramprakaash MCA

  ஏர்கனவெ இந்த மாட்டெர் வந்ததுதானெ

 5. megala.R

  மிகவும் அருமை. சிந்திக்கவேன்டிய கருத்துக்கள்.
  மேகலா.ரா
  பெங்கலூர்௬66

 6. Gokulakrishnan

  கோடானு கோடி நன்றி. குழப்பத்தில் இருந்த நான் தெளிவு பெற்றேன். என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை கண்டேன்.

 7. kannan

  Hi Rishi,

  Nice story.Even though we heard it earlier,it is nice to see it in tamil.
  Thanks for sharing.
  Thanks,
  Kannan

 8. R.Gayathri

  இன் எனி டயம் வால்வில் என்த ஜாடி அ போல் இருப்போம்

 9. meenal

  நல்லது ஒரு கதை! குறிக்கோள் இல்லா ஒவ்வொரு செயலும் வீண்

Comments are closed.