முடிவிலா சாத்தியங்கள் (4)

என்னப்பா, எல்ல்லரும் நலம்தானே?

நான் எழுதறதை ஒருத்தராவது படிக்கிறாருங்கறதுக்கு கீழே உள்ள கேள்வி ஆதாரம்… இதைவிட வெறெப்படி சிறக்க முடியும்?

ஜி என்பவரின் கேள்வி இங்கே:

//Saw your interviews in Jaya TV and in Deepam TV. Gist of what you have mentioned is "dont be judgemental", "take life as it comes and dont take anything too seriously and dont cling/attach on something and get suffered ". Then I heard you are a medium to talk to spirits and get messages from them and pass it onto requesters. My point is, assuming there are sprits ,there is a reason why they are not visible to our eyes, and also if you know what is going to happen in advance then there is no fun in life. I see some kind of contradiction between "dont take things seriously" vs seeking sprits help to benefit out of life. Can you explain your view points on this?’//

இந்தக் கேள்வியின் சாராம்சம் என்னவென்றால் ‘எதிலும் அதீத ஈடுபாடு வைக்கக் கூடாது என்று கூறிய நீங்களே ஆன்ம உலகத்தோடு தொடர்பு கொண்டு தகவல்கள் பெறுவதாகக் கூறுகிறீர்களே, இது முரண்படுவதாக இல்லையா?’ அருமையான கேள்வி. இப்படிப்பட்ட கேள்விகள் இன்னும் அதிகம் வர என்ன செய்யலாம்?

‘அதீத ஈடுபாடு கூடாது’ என்பதற்கும் ‘அதீத ஈடுபாடு இருந்தால் நமக்கு விருப்பப்பட்ட வாழ்க்கையை நாம் உருவாக்கிக் கொள்ள இயலாது’ என்பதற்கும் மிகுந்த வேறுபாடுகளுண்டு. நான் நேர்முகங்களில் சொன்னது இரண்டாவது.

‘ஏற்றுக் கொள்வது’ என்பதிலும் நம்மிடம் தவறான புரிதலிருக்கிறது. படகில் ஓட்டை விழுந்திருக்கிறது எனக் கொள்வோம். ‘ஆமாம், ஒழுகுகிறது. நான் ஏற்றுக் கொள்கிறேன்’ என்று வாளாவிருப்பது வாழ்க்கையை உருவாக்குமா?

‘ஏற்றுக் கொள்ளுதல்’ என்பது, நமது நாடகத்தன்மையை ஒதுக்கிவிட்டு ஒரு நிகழ்வை வெறும் நிகழ்வாகப் பார்ப்பது. ‘ஐயோ, படகில் ஓட்டை விழுந்து விட்டது. கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டாய்? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?’ போன்ற வண்ணங்களை நிகழ்வுகளுக்குப் பூசும்போது நமது ஆற்றல் வீணாகிறது. அதற்குப் பதிலாக, எந்த ஒரு கருத்தையும் நிகழ்வுமேல் சார்த்தாமல், போர்த்தாமல், நிகழ்வை வெறும் நிகழ்வாகப் பார்க்கும்போது அடுத்து நமக்கு என்ன வேண்டுமோ அதனைத் தெரிவு செய்யும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. வாளாவிருப்பதற்கும் வாழ்க்கையைத் தெரிவு செய்வதற்குமான வித்தியாசம் புரிகிறதல்லவா?

பிரபஞ்சம் அனைத்தையும் உள்ளடக்கியது. எனில், அதிலிருந்து நமக்கு விருப்பமானதை உருவாக்கிக் கொள்ள உதவும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் தவறாக ஏதாவது இருக்கிறதா? ஆன்ம உலகத்திலிருந்து அந்தத் தகவலைப் பெற்றாலும் அடுத்த வீட்டிலிருந்து பெற்றாலும் எல்லாம் பிரபஞ்சம்தானே?

ஒரு நாள் காலையில் எழுந்திருக்கும்போது நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் ஏதோ வேறொரு கிரகத்திலிருக்கிறீர்களெனக் கொள்வோம். பரந்து விரிந்த அந்தக் கிரகத்தில் வளங்கள் அபரிமிதமாகக் கொட்டிக் கிடக்கின்றன. என்ன வேண்டுமானாலும் நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்; எப்படி வேண்டுமானாலும் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளலாம். எனில், முதலில் என்னவெல்லாம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புவீர்களல்லவா? குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை சென்று பார்த்துவிட்டு வந்து கலந்து பேசி முடிவெடுக்க மாட்டீர்களா? அது போலத்தான் ஆன்ம உலகத் தொடர்பும்.

நாம் ஒவ்வொருவருக்கும் பிரபஞ்சத்தின் அனைத்து வளங்கள் குறித்த விழிப்புணர்வு இருக்கும் பட்சத்தில் அடுத்தவர் உதவி தேவையில்லை. இது சாத்தியமே. எனினும் இந்த நிலையை அடையாத பட்சத்தில் அடுத்தவரிடமிருடந்து தகவல் பெற்றுக் கொள்வதில் தவறேதுமில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து. இந்தக் கருத்து உங்கள் வாழ்க்கையை வளப்படுத்த உதவினால் எடுத்துக் கொள்ளுங்கள்; இல்லையெனில் விட்டுவிடுங்கள். இதில் சரியோ தவறோ ஏதுமில்லை.

நானும் பற்பல சுகமளிக்கும் உத்திகளையும் வழிமுறைகளையும் கற்றுக் கொண்டிருப்பதால் பல சமயங்களில் அவை ஒன்றுக்கொன்று முரண்படுவது போல் தோன்றி இருக்கிறது. சில சமயம் அதுவே எனக்கு மன நெருக்கத்தையும் கூட ஆரம்ப காலங்களில் ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் சில வருடங்களுக்கு முன்னால் ஒரு உண்மை நிகழ்வைக் கேட்டபோது எனக்குத் தெளிவு ஏற்பட்டது.

அமெரிக்க இந்தியர்களைப் பற்றிய விவரணப்படம் எடுக்கப் போன ஒரு படக்குழுவினரில் ஒருவருக்குக் கடுமையான இருமல் மற்றும் காய்ச்சல். அவர்கள் காட்டு வழியே சென்று கொண்டிருக்கும்போது, பழங்குடி வைத்தியரொருவர் வழியிலிருந்த மரத்திலிருந்து ஒரு இலையைப் பறித்து உடல் நலம் குன்றியவரிடம் அளித்து உண்ணச் சொன்னார். சில நிமிடங்களில் அவருக்கு இருமல் நின்று காய்ச்சல் சரியாகிவிட்டது. வியந்த படக்குழுவினர், அந்த மரத்தின் இலை மருத்துவ குணங்களுள்ளதா எனக் கேட்டபோது அவர் அளித்த பதில், "அந்தக் குறிப்பிட்ட மரத்திலிருந்த அந்தக் குறிப்பிட்ட இலை, அந்தக் குறிப்பிட்ட கணத்தில், அந்த குறிப்பிட்ட மனிதருக்கு நோயைக் குணப்படுத்தும் ஆற்றலுள்ளது"

அது போல, ஏன் பிரபஞ்சத்தில் ஒருவருக்கு உண்மையானது எல்லாருக்குமே உண்மையாக இருக்கவேண்டும் என்ற நியதியை வைத்துக் கொள்ள வேண்டும்? ஏன் பிரபஞ்சத்தில் பல உண்மைகள் இருக்கக் கூடாது? எப்போது எது நமக்கு சரியெனப் படுகிறதோ அதை எடுத்துக் கொண்டாலென்ன?

பூமியின் ஒரு துருவத்திலிருந்து மறு துருவத்திற்கு செல்ல வேண்டுமென்றால் இடது புறமாகவும் செல்லலாம்; வலது புறமாகவும் செல்லலாமல்லவா? ஒருவர் இடதுபுறமும் மற்றவர் வலது புறமுமாக பயணத்தை ஆரம்பிக்கும்போது இருவரும் எதிரெதிர் திசையில் செல்வது போலத் தோன்றினாலும், இருவருமே இலக்கை அடையலாம் என்பது நமக்கெல்லாம் தெரியும்தானே?

நான் கற்று வைத்திருக்கும் உத்திகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டாலும், நான் அவற்றைத் தேவையான போது பயன்படுத்திக் கொள்ளத் தவறுவதில்லை; தடுமாறுவதுமில்லை. முரண்பாடுகளிலிருந்து முடிவிலா சாத்தியங்களையே உருவாக்கிக் கொள்ள விரும்புகிறேன். வேறென்ன சாத்தியம்?

நீங்கள் அப்படி இருக்கத் தேவையில்லை. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அவற்றை சுவாரஸ்யமான கண்ணோட்டங்களாகக் கருதிக் கொண்டு நீங்கள் விரும்பும் பாதையில் செல்லலாம். அல்லது உங்கள் மனதிற்குத் தெளிவு ஏற்படும் வரை அவற்றை ஆராய்ந்து கொண்டே இருக்கலாம். தெரிவு முற்றிலும் தங்களதே!

ஜியோட கேள்வியினால ஒரு வாரம் ஓட்டியாச்சுடோய்! வேற யாருக்கெல்லாம் கேள்விகளிருக்கு? (அடுத்த வாரத்துக்கு சரக்கொண்ணுமில்லை)

பாரீஸில தமிழ்ல பார்ஸ் வகுப்பு வேணும்னு ஒரு பெண்மணி ரொம்ப ஆவலா கேக்கறாங்க. வேற யாராவது ஃபிரான்ஸில இருக்கீங்களா? வகுப்புல ஆர்வமிருக்கா?

மக்களெல்லாம் வீட்டில தேர்வு ஜுரத்தில இருப்பீங்க இல்லையா? இந்தப் படத்தைப் பார்த்தா கொஞ்சம் படபடப்பு அடங்குதா?

இந்தவாரம் நிலாச்சாரல் குழுமத்தில ஒரு விளையாட்டு விளையாடினோமே… ரொம்ப ஜாலியா இருந்தது. நீங்கல்லாம் கலந்துக்காம மிஸ் பண்ணிட்டீங்க…

http://www.facebook.com/groups/210462155759047/223220504483212/?notif_t=group_comment_reply#!/groups/210462155759047/

அடுத்த வாரம் ஒரு அட்வான்ஸ்ட் ட்ரெயினிங்கிற்காக ரோம் போறேன். (அதுக்கப்பறம் இன்னும் முரண்பாடு முத்திடும் – வார்னிங்) அதற்கடுத்த வாரம் எழுதறேன்…

அதுவரை சுவாரஸ்யமான கண்ணோட்டங்களோட வாழ்க்கையை அனுபவியுங்க.

அபரிமிதமான அன்புடன்,
நிலா… நிலா… நிலா (ச்ச்சும்மா ஒரு சுவாரஸ்யத்துக்காக எக்கோ எஃபக்ட்)

About The Author

2 Comments

 1. G

  Thanks for your reply. I really appreciate it.
  //அடுத்த வாரத்துக்கு சரக்கொண்ணுமில்லை//
  If so, may be can you please write more about spirits..I heard somewhere they are forbidden to reveal any truth (like exposing something good/bad future event is going to happen to specific person etc), if so when you are a medium,how can they” reveal anything real to you? Also if GOD is the deiciding authority of fate/events,how spirits can come to know about it? Does it mean GOD plans/discuss it openly with them or what? Do they have general body meeting sort of thing or some computer display or google sort of thing is there in the spirit world through which spirit can query and find out and then tell to medium?

  Another question is about reincarnation, most of the religions say ,if somebody died then depends on their karma he/she might have another birth as whatever living being that GOD wants him/her to be,if so, how it is possible to talk to their spirit through a medium as the dead person already would have taken another form of birth?

  These are genuine questions and I am not teasing you, so please dont take it personaly and give me your best answers please.

  Look forward to your reply on this forum. Thanks in advance.”

 2. tdrajeswaran

  அது போல, ஏன் பிரபஞ்சத்தில் ஒருவருக்கு உண்மையானது எல்லாருக்குமே உண்மையாக இருக்கவேண்டும் என்ற நியதியை வைத்துக் கொள்ள வேண்டும்? ஏன் பிரபஞ்சத்தில் பல உண்மைகள் இருக்கக் கூடாது? எப்போது எது நமக்கு சரியெனப் படுகிறதோ அதை எடுத்துக் கொண்டாலென்ன?

  பூமியின் ஒரு துருவத்திலிருந்து மறு துருவத்திற்கு செல்ல வேண்டுமென்றால் இடது புறமாகவும் செல்லலாம்; வலது புறமாகவும் செல்லலாமல்லவா? ஒருவர் இடதுபுறமும் மற்றவர் வலது புறமுமாக பயணத்தை ஆரம்பிக்கும்போது இருவரும் எதிரெதிர் திசையில் செல்வது போலத் தோன்றினாலும், இருவருமே இலக்கை அடையலாம் என்பது நமக்கெல்லாம் தெரியும்தானே?”

  மிகவும் அற்புதமான கருத்து. பாராட்டுக்கள்.”

Comments are closed.